இந்திய அணியின் நட்சத்திர துவக்க ஆட்டக்காரரான சஞ்சு சாம்சன் சமீப காலமாகவே மோசமான பேட்டிங் ஃபார்ம் காரணமாக டி20 கிரிக்கெட் அணியில் உள்ளே வருவதும், வெளியே போவதுமாக இருந்து வருகிறார். இந்த உலககோப்பை தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக நடைபெற்ற நியூசிலாந்து தொடரில் அவர் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் காரணமாக அவரது இடத்தில் இஷான் கிஷன் துவக்க வீரராக விளையாடி வந்தார்.
சஞ்சு சாம்சனுக்கு வேண்டுகோள் வைத்த : ரவிச்சந்திரன் அஷ்வின்
ஆனால் அபிஷேக் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகிய இருவருமே இடது கை ஆட்டக்காரர்களாக இருப்பதால் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்றின் போது துவக்க வீரராக அபிஷேக் சர்மாவை களமிறக்கிய இந்திய அணி மூன்றாவது இடத்தில் இஷான் கிஷனை களமிறக்கியது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சஞ்சு சாம்சன் 15 பந்துகளில் 24 ரன்கள் அடித்திருந்தார்.
ஆனாலும் நல்ல துவக்கம் கிடைத்தும் விரைவிலேயே ஆட்டமிழந்த அவரது பேட்டிங் மீது விமர்சனம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் அவர் கொடுத்த அதிரடியான துவக்கம் காரணமாக இந்திய அணி பெரிய ரன் குவிப்பை நோக்கி சென்றது. இந்நிலையில் சஞ்சு சாம்சன் தொடர்ந்து சிறப்பாக செயல்பட வேண்டுமெனில் அவர் என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் சஞ்சு சாம்சனுக்கு சில வேண்டுகோள்களை முன் வைத்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : சஞ்சு சாம்சனிடம் இருக்கும் ஒரு பெரிய பிரச்சனையே அவர் ஆட்டமிழக்கும் முறை மட்டும்தான். நல்ல துவக்கங்கள் கிடைத்தாலும் பெரிய ரன்களை அடிக்காமல் அவர் ஆட்டமிழக்கிறார். குறிப்பாக பேட் ஸ்டிக்கரில் பந்து பட்டு அவர் ஆட்டமிழக்கிறார்.
இதையும் படிங்க : எந்தவொரு பவுலரும் செய்யாத மோசமான சாதனையை நிகழ்த்திய ஷிவம் துபே – விவரம் இதோ
மிகவும் பின்னோக்கி செல்லும் அவர் பந்தை அதிக உயரத்தில் எதிர்கொள்வதால் ஆட்டமிழக்கிறார். எனவே எனக்கு தெரிந்து சர்வதேச போட்டிகளில் அவர் சாதிக்க வேண்டுமெனில் ஒன்று அவர் சதம் அடித்து தன்னை நிரூபிக்க வேண்டும். இல்லையெனில் ஒரு போட்டியில் இந்திய அணிக்கு வென்று கொடுக்கும் வகையில் அடித்து காட்ட வேண்டும் என அவருக்கு அஷ்வின் வேண்டுகோள் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.



