சுப்மன் கில் வேணாம்.. யாஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு அந்த வாய்ப்பை குடுங்க – ரவிச்சந்திரன் அஷ்வின் கருத்து

Ashwin and Jaiswal
- Advertisement -

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்பட இருக்கும் நிலையில் இந்திய அணியில் எந்தெந்த வீரர்களுக்கு இடம் கிடைக்கப்போகிறது? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது. அதோடு இந்திய அணியில் நடைபெறப்போகும் மாற்றங்கள் என்ன? என்பதை காணவும் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அதுகுறித்த விவாதங்களும் சமூக வலைத்தளத்தில் நடைபெற்று வருகின்றன.

யாஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு தாங்க : அஷ்வின் கருத்து

அதேவேளையில் இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் யார் இடம்பெற வேண்டும்? என்பது குறித்த கருத்துக்களை முன்னாள் வீரர்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் எதிர்வரும் இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் மாற்று துவக்க வீரராக ஜெயஸ்வால் இடம்பெற வேண்டும் என்று தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக சுப்மன் கில்லை தாண்டி யாஷஸ்வி ஜெய்ஸ்வால் அந்த இடத்திற்கு தகுதியானவர் என்று அவர் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : ஏற்கனவே யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரின் போது ரோஹித் சர்மாவுக்கு மாற்று துவக்க வீரராக அந்த அணியில் இடம் பெற்றிருந்தார்.

தற்போது ரோகித் சர்மா டி20 போட்டிகளில் இருந்து வெளியேறி உள்ளதால் நீங்கள் நேரடியாக யாஷஸ்வி ஜெய்ஸ்வாலை பேக்கப் துவக்க வீரராக தேர்வு செய்ய வேண்டும். அதுவே என்னுடைய விருப்பம். ஏனெனில் ஜெய்ஸ்வால் மிகச் சிறப்பான ஒரு துவக்க வீரர். அவரால் அதிரடியான இன்னிங்ஸ்ஸை விளையாட முடியும்.

- Advertisement -

தற்போதைய இந்திய டி20 அணியில் சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக்சர்மா ஆகியோர் சிறப்பாக விளையாடி வரும் வேளையில் அந்த துவக்க வீரர்களுக்கான இடத்தில் மாற்று வீரராக நான் ஜெய்ஸ்வாலை தேர்வு செய்வேன். அவரால் நிச்சயம் அனைத்து வடிவ போட்டிகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : புவனேஷ்வர் குமாரை யாரும் கவனிக்குறது இல்ல.. அவருக்கு அந்த வாய்ப்பை கொடுங்க – சீக்கா ஆதரவு

ஏற்கனவே இங்கிலாந்து மண்ணில் நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரில் சுப்மன் கில் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்திய வேளையில் அவருக்கு மீண்டும் டி20 அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்று பேசப்படும் வேளையில் அவரை தாண்டி ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று அஸ்வின் கூறியது பலரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement