நேத்து தான் அவனை பாராட்டுனேன்.. ஆனா இன்னைக்கு இதை சொல்லியே ஆகனும்.. கம்போஜ் குறித்து – அஷ்வின் பேச்சு

Ashwin and Kamboj
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டியில் ஹரியானாவை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான அன்ஷுல் கம்போஜிக்கு அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டது. முதல்தர கிரிக்கெட்டில் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி அசத்தியுள்ள அவர் டெஸ்ட் போட்டியில் கிடைத்த இந்த வாய்ப்பையும் மிகச் சிறப்பாக பயன்படுத்திக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அன்ஷுல் கம்போஜ் நான் பாத்த மாதிரி இல்ல : அஷ்வின் கருத்து

ஆனால் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இந்த நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இதுவரை அவர் 18 ஓவர்களில் 89 ரன்கள் விட்டு கொடுத்து ஒரு விக்கெட்டை மட்டுமே கைப்பற்றியுள்ளார். இந்த போட்டியில் அவர் பென் டக்கெட்டின் விக்கெட்டை கைப்பற்றி இருந்தாலும் அவரது பந்துவீச்சு மிகவும் மோசமான வகையில் இருந்து வருகிறது.

- Advertisement -

ஏனெனில் கடந்த போட்டியில் விளையாடிய ஆகாஷ் தீப்பிற்கு ஏற்பட்ட காயம் காரணமாக முதன்மை வேகப்பந்து வீச்சாளராக இடம்பிடித்த அவர் மிகவும் குறைந்த வேகத்தில் பந்துவீசி வருவது பலரது மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அதோடு லைன் அண்ட் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவார் என்றும் தொடர்ச்சியாக விக்கெட் டேக்கிங் டெலிவரியை வெளிப்படுத்துவார் என்றும் பேசப்பட்டது.

ஆனால் இப்படி அவர் குறித்து பேசப்பட்ட அனைத்தையும் பொய்யாக்கும் வகையில் மோசமான பந்துவீச்சை இந்த போட்டியில் அவர் வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் அவரது இந்த மோசமான செயல்பாடு குறித்து பேசியுள்ள முன்னாள் இந்திய வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் கூறுகையில் : இந்த போட்டி ஆரம்பிக்கும் போது நேற்று தான் நான் அன்ஷுல் கம்போஜ் குறித்து பாராட்டி பேசிருந்தேன்.

- Advertisement -

அவரால் துல்லியமாக பந்துவீச முடியும் என்றும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அவர் தொடர்ந்து பந்து வீசுவார் என்றும் கூறியிருந்தேன். ஆனால் தற்போது இதைச் சொல்லித்தான் ஆக வேண்டும். அவரது வேகம் மிகவும் குறைவாக உள்ளது. அது எனக்கு ஆச்சரியமாகவும் இருக்கிறது. ஏனெனில் அவர் ஐபிஎல் தொடரின் போது மிகவும் வேகமாக பந்து வீசியிருந்தார். ஆனால் தற்போது அதற்கு முற்றிலும் மாறாக மிகவும் பொறுமையாக பந்துவீசுகிறார்.

இதையும் படிங்க : டிராவிட், புஜாரா மாதிரி அந்த இடத்தில் சாய் சுதர்சனால் அசத்த முடியும் – ரவிச்சந்திரன் அஷ்வின் நம்பிக்கை

அவருடைய உடற்தகுதியில் ஏதேனும் பிரச்சனை இருக்குமா? என்றும் தோன்றுகிறது. ஏனெனில் உடற்தகுதியில் பிரச்சனை இருந்தால் மட்டுமே இதுபோன்று வேகம் குறையும். இவர் இப்படி தொடர்ந்து மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தினால் நிச்சயம் அவரது இடத்தை இழக்கும் அபாயம் ஏற்படும். ஏனெனில் இந்திய அணிக்காக அவ்வளவு வேகப்பந்து வீச்சாளர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர் என ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement