உயரமான அஸ்வின் பேட்டிங் ஜாம்பவான் விவிஎஸ் லக்ஷ்மன் மாதிரியே இருக்கு.. முன்னாள் இந்திய வீரர் பாராட்டு

Ashwin and Laxman
- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. செப்டம்பர் 19ஆம் தேதி துவங்கிய அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 376 ரன்கள் குவித்து அசத்தியது. இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, சுப்மன் கில் ஆகியோர் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டானார்கள்.

அப்போது நிதானமாக விளையாட முயற்சித்த ஜெய்ஸ்வால் 56, ரிஷப் பண்ட் 39 ரன்களில் அவுட்டாகி சென்றனர். அதனால் 144-6 என தடுமாறிய இந்திய அணியை மிடில் ஆர்டரில் ஜோடி சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் – ரவீந்திர ஜடேஜா ஆகியோர் 199 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மீட்டெடுத்தனர். அதில் அஸ்வின் தனது சொந்த ஊரில் சதமடித்து 113 ரன்களும் ஜடேஜா 86 ரன்களும் குவித்து அசத்தினர்.

- Advertisement -

விவிஎஸ் லக்ஷ்மன் மாதிரி:

வங்கதேச அணிக்கு அதிகபட்சமாக ஹசன் மஹ்முத் 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். இந்நிலையில் கொஞ்சம் உயரமாக இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் பேட்டிங் டெக்னிக் ஜாம்பவான் விவிஎஸ் லக்ஷ்மன் போல இருப்பதாக முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா பாராட்டியுள்ளார். இது பற்றி ஜியோ சினிமா சேனலில் அவர் பேசியது பின்வருமாறு.

“அஸ்வின் முதலில் பந்தை தம்மை நோக்கி வர விடுகிறார். அவரிடம் தன்னுடைய பேக் புட்டில் அடிக்கக்கூடிய ஷாட்டுகள் மட்டுமே இருக்கிறது. அவருடைய கால்களை பொறுத்த வரை அவர் அடிக்கடி எனக்கு விவிஎஸ் லக்ஷ்மனை நினைவுபடுத்துகிறார். ஆனால் இன்று அவருடைய டிரைவிங் திறன், ஸ்பின்னர்களுக்கு எதிராக முட்டியை மடக்கி அடிப்பது மற்றும் சிக்ஸர்களை விளாசுவது ஆகியவை சிறப்பாக இருந்தது”

- Advertisement -

அனுபவத்தால் அசத்தும் அஸ்வின்:

“ஜடேஜாவும் நன்றாக விளையாடினார். ஆனால் முதல் நாளில் இந்தியா மீண்டு வந்ததற்கான அதிகப்படியான பாராட்டுக்கள் அஸ்வினை சேரும். இப்போதெல்லாம் அஸ்வின் தன்னுடைய பேட்டிங்கில் ரன்கள் குவிப்பதை நாம் அடிக்கடி பார்ப்பது பழக்கமாக இருக்கிறது. அதே சமயம் சமீப காலங்களில் அவருடைய பேட்டிங் ஃபார்மில் கொஞ்சம் சரிவு ஏற்பட்டது. அதனாலேயே அவர் பேட்டிங் வரிசையில் கீழே இறக்கப்பட்டுள்ளார்.”

இதையும் படிங்க: அஸ்வின் மாதிரியான அந்த 3 வீரர்களோட அருமை ரிட்டையரான அப்றம் தான் இந்தியாவுக்கு தெரியும்.. டிகே பாராட்டு

“இருப்பினும் அஸ்வின் ஒழுங்கமைக்கப்பட்ட வீரர். அழுத்தத்தை உள்வாங்கி விளையாடுவதே அவருடைய ஆட்டத்திற்கான அடிப்படையாக இருக்கிறது. இந்திய வீரர்கள் 204 டி20 உலகக் கோப்பை போன்ற சமீபத்திய கிரிக்கெட்டில் விளையாடியுள்ளனர். ஆனால் கடைசியாக இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடிய அஸ்வின் நீண்ட நாட்கள் கழித்து வங்கதேச தொடரில் களமிறங்கினாலும் நன்றாக விளையாடினார்” என்று கூறினார்.

Advertisement