- Advertisement -
உலக கிரிக்கெட்

ஐ.பி.எல்-லில் ஓய்வுபெற்ற கையோடு வெளிநாட்டு லீக்கில் தனது பெயரை பதிவுசெய்த அஷ்வின் – எந்த தொடர் தெரியுமா?

இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்து வந்த ரவிச்சந்திரன் அஷ்வின் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அசைக்க முடியாத வீரராக திகழ்ந்து வந்தார். ஆனால் கடந்த 2024-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கெதிரான தொடரின் போது தான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீர் அறிவிப்பை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். மேலும் தான் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவேன் என்றும் அறிவித்திருந்தார்.

வெளிநாட்டு லீக் தொடரில் தனது பெயரை பதிவுசெய்த ரவிச்சந்திரன் அஷ்வின் :

அந்த வகையிலேயே கடந்த ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் 2025 ஐ.பி.எல் தொடரில் சி.எஸ்.கே அணிக்காக இடம் பிடித்து விளையாடி இருந்தார். சி.எஸ்.கே அணியும் அவரை மெகா ஏலத்தின் போது 9 கோடியே 25 லட்சம் என்கிற பெரிய தொகை கொடுத்து ஏலம் எடுத்திருந்தது. இதன் காரணமாக இன்னும் சில சீசன்கள் அவர் சி.எஸ்.கே அணியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்ட அஷ்வின் ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். அவரது இந்த திடீர் அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தையும், கேள்வியையும் எழுப்பியிருந்தது. இதுகுறித்து விளக்கம் அளித்திருந்த அஷ்வின் கூறுகையில் :

நான் ஐபிஎல் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றதற்கு காரணமே உலகெங்கிலும் நடைபெற்று வரும் லீக் போட்டிகளில் விளையாடி இன்னும் நிறைய கற்றுக்கொள்ள விரும்புகிறேன். அதன் காரணமாகவே ஐபிஎல் போட்டிகளில் இருந்து வெளியேறுவதாக அறிவித்திருந்தார். இதன் காரணமாக வெளிநாட்டில் நடைபெறும் லீக் போட்டிகளில் அவரை பார்க்க முடியும் என்கிற திருப்தி இருந்தது.

- Advertisement -

இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த கையோடு தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐ.எல்.டி டி20 லீக் தொடருக்கான ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்திருந்த அஸ்வின் கூறுகையில் : நான் எதிர்வரும் ஐ.எல்.டி டி20 சீசனுக்காக என்னுடைய பெயரை பதிவு செய்திருக்கிறேன். நிச்சயம் ஏதாவது ஒரு அணி என்னை வாங்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : உங்களது பங்களிப்பு பாராட்டுக்குரியது.. இந்திய அணி பாதுகாப்பான கைகளில் உள்ளது – புஜாராவை வாழ்த்திய மோடி

ஏற்கனவே ஐ.எல்.டி டி20 லீக் போட்டிகளில் இந்திய முன்னாள் வீரர்களான யூசுப் பதான், ராபின் உத்தப்பா, அம்பத்தி ராயுடு ஆகியோர் விளையாடி வரும் வேளையில் அஷ்வினும் விளையாடினால் அந்த தொடருக்கும் நல்ல விளம்பரம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -