உ.கோ ஜெயிக்கிறது தான் வேலையா? ஒரு மேட்ச் தோத்துட்டா போதுமே – இந்தியாவின் விமர்சனங்களுக்கு அஸ்வின் கொடுத்த பதிலடி என்ன

Ravichandran Ashwin 2
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்க போகும் ஐசிசி 2023 உலகக்கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் கோலாகலமாக துவங்க உள்ளது. அதில் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து, வெற்றிகரமான ஆஸ்திரேலியா போன்ற உலகின் இதர கிரிக்கெட் அணிகளை சமாளித்து சொந்த மண்ணில் வலுவான அணியாக திகழும் இந்தியா 2011 போல கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. சொல்லப்போனால் 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் தொடர் தோல்விகளை சந்தித்து வருவதால் சொந்த மண்ணில் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் நடைபெறும் இந்த தொடரில் கோப்பையை வென்றாக வேண்டுமென்ற எக்ஸ்ட்ரா அழுத்தத்துடன் இந்தியா விளையாட உள்ளது என்றே சொல்லலாம்.

ஆனால் முக்கியமான போட்டிகளில் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் கை விடுவது 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் எதிரொலித்த நிலையில் பும்ரா, ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற முதன்மை வீரர்கள் இன்னும் காயத்திலிருந்து குணமடையாமல் இருப்பது ரசிகர்களுக்கு கவலையை ஏற்படுத்தும் அம்சமாக இருந்து வருகிறது. அதை விட உலகக்கோப்பைக்கு இன்னும் 100 நாட்கள் கூட இல்லாத நிலைமையில் முதன்மையான வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் சோதனை என்ற பெயரில் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஓய்வெடுத்து கொடுத்த வாய்ப்பில் இளம் வீரர்கள் சொதப்பலாக செயல்பட்டு 5 வருடங்களுக்குப் பின் படுதோல்வியை பரிசளித்தனர்.

- Advertisement -

அஸ்வின் பதிலடி:
அதனால் பலவீனமான வெஸ்ட் இண்டீஸ் அணியிடமே திணறிய இந்தியா நிச்சயமாக சொந்த மண்ணில் நடைபெறும் உலகக் கோப்பையையும் வெல்லப் போவதில்லை என்று ரசிகர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். இந்நிலையில் ஓரிரு போட்டிகளில் தோல்வியை சந்தித்தாலே இப்படி ரசிகர்கள் தாறுமாறாக பேசுவது வாடிக்கையாகி விட்டதாக இந்திய அணியின் மீதான விமர்சனங்களுக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் பதிலடி கொடுத்துள்ளார்.

குறிப்பாக பும்ரா போன்ற முக்கிய வீரர்கள் காயமடைந்துள்ள நிலையில் மாற்று வீரர்களை கண்டறிவதற்கான சோதனையை புரிந்து கொள்ளாமல் விமர்சிக்காதீர்கள் என்று ரசிகர்களுக்கு பதிலடி கொடுக்கும் அவர் ஐபிஎல் தொடரில் அசத்துவதால் உலகக் கோப்பையை வெல்வது மட்டுமே இந்திய அணியின் வேலையாக இருக்க வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “2வது ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வியை சந்தித்ததும் ஏன் புதிய வீரர்கள் விளையாடினார்கள் ஏன் முக்கிய வீரர்கள் விளையாடவில்லை என்று சமூக வலைதளங்களில் பேச்சுக்கள் ட்ரண்ட்டாகின”

- Advertisement -

“இந்த பேச்சுக்களை உண்மையாக என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ரோகித் மற்றும் விராட் ஆகியோர் விளையாடவில்லை. முதல் போட்டியிலும் ரோகித் மிடில் ஆர்டரில் விளையாடினார். அதனால் ரோஹித் மற்றும் விராட் ஆகியோர் விளையாடியிருக்க வேண்டும் என்ற விவாதங்கள் எழுந்தன. அதிலும் சிலர் உலகக் கோப்பைக்கு தகுதி பெறாத அணியிடம் இந்தியா தோற்றுப் போனதாக பேசினார்கள். அதை விட இங்கே சர்வதேச கிரிக்கெட்டில் உலகக் கோப்பையை வெல்வது மட்டுமே இந்தியாவின் வேலை என்று நினைக்கிறார்கள்”

“குறிப்பாக நம்முடைய பெரும்பாலான வீரர்கள் ஐபிஎல் தொடரில் அசத்துவதால் ஒவ்வொரு முறையும் உலக கோப்பையை வெல்வோம் என்று நான் நினைக்கிறோம். இருப்பினும் ஒருநாள் போட்டிகள் மிகவும் கடினமானது. அதில் ஒரு போட்டியில் விளையாடும் வீரர்கள் முழுமையாக புத்துணர்ச்சியடைவதற்கு 2 நாட்கள் தேவைப்படும். ஆனால் நாம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலிரண்டு போட்டிகளை 24 மணி நேர இடைவெளியில் விளையாடினோம்”

- Advertisement -

“அதனால் காயங்களை சந்திப்பதற்கான வாய்ப்புகளும் அதிகமாகும். ஆனால் ஏற்கனவே என்சிஏவில் நம்முடைய வீரர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். அதில் பும்ரா, பிரசித் கிருஷ்ணா ஆகியோர் வெளிவந்துள்ள நிலையில் அனைவரும் ராகுல் டிராவிட் மற்றும் ரோகித் சர்மாவை விமர்சிப்பதற்கான காரணங்களை கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறார்கள்”

இதையும் படிங்க:IND vs WI : ஸ்டம்பிலே படாத பந்தை அவுட் என நினைத்து வெளியேறிய வெ.இ துவக்க வீரர் – அம்பயரும் தடுக்கல (ஏன் தெரியுமா?)

“ஆனால் அவர்கள் கடந்த டி20 உலக கோப்பையில் சந்தித்த தோல்வியை தொடர்ந்து வித்தியாசமான வீரர்களை கண்டறியும் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக நம்மிடம் பும்ரா போன்ற பவுலர்கள் இல்லாத காரணத்தாலேயே 2023 உலக கோப்பைக்கு முன்பாக அவர்கள் வித்தியாசமான பவுலர்களை சோதித்து வருகிறார்கள்” என்று கூறினார்.

Advertisement