- Advertisement -
இந்திய கிரிக்கெட்

காசுக்காக இந்தியாவிடம் ஆப்கானிஸ்தான் தோற்க மாட்டாங்க.. பாகிஸ்தான் நிரூபரால் எலான் மஸ்க்கிற்கு அஸ்வின் கோரிக்கை

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் லீக் சுற்றுடன் வெளியேறியது. சமீப காலங்களாகவே திணறி வரும் அந்த அணி இந்தத் தொடரில் கத்துக்குட்டியாக கருதப்படும் அமெரிக்காவிடம் முதல் முறையாக சூப்பர் ஓவரில் அவமான தோல்வியை பதிவு செய்தது. அதைத்தொடர்ந்து இந்தியாவிடம் 120 ரன்கள் சேசிங் செய்ய முடியாமல் 6 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோற்றது.

அதனால் கனடா மற்றும் அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் வேலை பாகிஸ்தான் பரிதாபமாக வீட்டுக்கு கிளம்பியது. மறுபுறம் கத்துக்குட்டியாக கருதப்படும் ஆப்கானிஸ்தான் சமீப காலங்களாகவே மிகப்பெரிய எழுச்சி கண்டு வருகிறது. குறிப்பாக கடந்த 2023 உலகக் கோப்பையில் இங்கிலாந்தையும் பாகிஸ்தானையும் முதல் முறையாக வீழ்த்தி ஆப்கானிஸ்தான் சரித்திரம் படைத்தது.

- Advertisement -

அஸ்வின் கோரிக்கை:
அதே வேகத்தில் இந்த உலகக் கோப்பையில் நியூசிலாந்தை தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பிய ஆப்கானிஸ்தான் முதல் முறையாக கிரிக்கெட்டின் அசுரனாக போற்றப்படும் ஆஸ்திரேலியாவையும் வீழ்த்தியது. அதன் காரணமாக வங்கதேசத்துக்கு எதிரான தங்களுடைய கடைசி போட்டியில் வென்றால் செமி ஃபைனலுக்கு தகுதி பெறலாம் என்ற நல்ல நிலைக்கு ஆப்கானிஸ்தான் போராடி வந்துள்ளது.

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் எவ்வளவு பெரிய டாப் அணியை தோற்கடித்தாலும் இந்தியாவை மட்டும் வீழ்த்தாது என்று பாகிஸ்தானை சேர்ந்த பிரபல பத்திரிகை நிருபர் வஜஹத் கஸ்மி கூறியுள்ளார். ஏனெனில் இந்தியாவை வீழ்த்தினால் ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கு ஐபிஎல் தொடரில் கோடிக்கணக்கான சம்பளத்தை கொடுக்கும் ஒப்பந்தம் கிடைக்காது என்று அவர் சம்மந்தப்பற்ற காரணத்தை தெரிவித்திருந்தார்.

- Advertisement -

அதைப் பார்த்து கடுப்பான ரவிச்சந்திரன் அஸ்வின் இது போன்ற ஆதாரமற்ற நியாயமற்ற பேச்சுக்களை கொண்டுவரும் நபர்களை தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் பார்க்காமல் இருப்பதற்கு ஏதாவது செய்யுங்கள் என்று அதன் உரிமையாளர் எலான் மஸ்க்கிற்கு கோரிக்கை வைத்துள்ளார். இது பற்றி ட்விட்டரில் அஸ்வின் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நான் சொல்ல முடியாது எலான் மஸ்க்”

இதையும் படிங்க: ஒரு சீனியர் கூட இல்ல.. ஜிம்பாப்வே தொடருக்கு புதிய கேப்டன் தலைமையில் இளம் அணியை அறிவித்த பிசிசிஐ

“ஆனால் என்னுடைய வீட்டில் யார் நுழைய வேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமை எனக்கு இருக்கிறது. அதே போல ட்விட்டரில் எனது டைம்லைன் நான் தான் முடிவெடுக்க வேண்டும்” என்று பதிவிட்டு எலான் மஸ்க் டேக் செய்துள்ளார். அதே போல “அப்படியானால் காசு வாங்கிக்கொண்டு தான் நீங்களும் ஆப்கானிஸ்தானிலும் தோற்றீர்களா” என்று அந்த பாகிஸ்தான் நிருபரை இந்திய ரசிகர்களும் ட்விட்டரில் கடுமையாக விமர்சித்து பதிலடி கொடுத்து வருகின்றனர்.

- Advertisement -