- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்திய அணியின் அடுத்த ஹார்டிக் பாண்டியா இவர்தான்.. தம்பி கலக்குறாரு – தமிழக வீரர் அஷ்வின் பாராட்டு

இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய கிரிக்கெட் அணியானது அங்கு நடைபெற்ற டி20 தொடரை மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் கைப்பற்றியது. அதனை தொடர்ந்து நடைபெற்ற ஒருநாள் தொடரை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது இழந்தது ரசிகர்கள் மத்தியில் சற்று ஏமாற்றத்தை அளித்தது.

அடுத்த ஹார்டிக் பாண்டியா :

அதனை தொடர்ந்து தற்போது ஒரு மாத கால ஓய்வில் இருக்கும் இந்திய அணியானது அடுத்ததாக வங்கதேச அணிக்கு எதிராக நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட தயாராகி வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த வங்கதேச தொடருக்கு முன்னதாக தற்போது இந்தியாவில் உள்ளூர் தொடரான துலீப் டிராபி தொடரானது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய அணியை சேர்ந்த நட்சத்திர வீரர்கள் அனைவருமே கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.

அந்த வகையில் இந்த துலீப் டிராபி தொடரில் இளம் ஆல்ரவுண்டான நிதிஷ் ரெட்டியும் பங்கேற்று விளையாடி வருகிறார். 21 வயதான அவர் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி இதுவரை 15 போட்டிகளில் விளையாடி 303 ரன்கள் குவித்துள்ளார். பேட்டிங்கில் மிடில் ஆர்டரில் வந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தும் அவர் பந்துவீச்சிலும் கைகொடுக்கக் கூடியவர்.

- Advertisement -

எனவே ஹார்டிக் பாண்டியாவிற்கு அடுத்து ஆல்ரவுண்டராக வரக்கூடிய அனைத்து திறமையும் இருப்பதாக அவர் மீது ஒரு பார்வை இருந்து வருகிறது. இந்நிலையில் ஏற்கனவே நிதிஷ் ரெட்டி குறித்து பாராட்டி பேசியிருந்த தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தற்போது மீண்டும் நிதிஷ் ரெட்டி குறித்து ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க : எங்களை வளத்தவரு அவர் தான்.. தல தோனி, விராட் கோலி, ரோஹித் கேப்டன்ஷிப் பற்றி அஸ்வின் பேட்டி

அதில் நிதிஷ் ரெட்டி பந்துவீச்சு சரியாக இருக்கிறது. அவர் சிறப்பாக பந்து வீசுகிறார் என்று அஸ்வின் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஏற்கனவே நிதிஷ் ரெட்டி மீது அனைவருக்கும் ஒரு பார்வை இருந்த வரும் வேளையில் தற்போது அஸ்வினும் அவரை பாராட்டி உள்ளது மேலும் கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -