- Advertisement -
இந்திய கிரிக்கெட்

கவலைப்படாத இந்த வயசுலயே ரொம்ப கஷ்டப்படுற நீ நல்லா வருவ – இளம் இந்திய வீரருக்கு அஸ்வின் உத்வேக ஆதரவு

டெல்லி சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் பிரித்திவி ஷா கடந்த 2018 ஐசிசி அண்டர் 19 உலக கோப்பையை கேப்டனாக வென்று சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி வெஸ்ட் இண்டீஸ் எதிரான தன்னுடைய முதல் போட்டியிலே சதமடித்து மிகவும் வெற்றிகரமாக கால் தடம் பதித்தார். குறிப்பாக சச்சின் டெண்டுல்கர், பிரைன் லாரா, சேவாக் ஆகியோர் கலந்த கலவை என ரவி சாஸ்திரி பாராட்டும் அளவுக்கு ஆரம்ப காலங்களில் அசத்திய அவர் நாளடைவில் அதை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் தடுமாற்றமாக செயல்பட்டார். குறிப்பாக லேசாக ஸ்விங்காகி வரும் வேகப் பந்துகளுக்கு தடுமாறிய அவர் ஐபிஎல் தொடரிலும் சுமாராக செயல்பட்டதால் கடந்த 2021 ஜூலையுடன் கழற்றி விடப்பட்டார்.

அதை தொடர்ந்து போட்டிகளில் விளையாடியும் தேர்வுக்குழு கண்டுகொள்ளாத நிலையில் ஒருமுறை இருமல் மருந்து உட்கொண்டதில் தடை செய்யப்பட்ட மருந்து கலந்திருந்ததால் ஊக்க மருந்து சோதனையில் தோல்வியை சந்தித்த அவர் 6 மாதங்கள் தடை பெற்றார். அதற்காக மனம் தளராமல் தடை விலகிய பின் உடல் எடையை குறைத்து உள்ளூர் போட்டிகளில் விளையாடிய அவர் கடந்த ரஞ்சிக் கோப்பையில் முச்சதம் அடித்து அசத்தியதால் ஒரு வழியாக 500 நாட்கள் கழித்து கடந்த பிப்ரவரியில் நடந்த நியூசிலாந்து டி20 தொடரில் தேர்வானார்.

- Advertisement -

அஸ்வின் உத்வேகம்:
ஆனாலும் விளையாடும் 11 பேர் அணியில் கிடைக்காத வாய்ப்பை உறுதி செய்ய ஐபிஎல் 2023 தொடரில் அசத்த வேண்டிய அவர் அப்படியே நேர்மாறாக சுமாராக செயல்பட்டதால் வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து, 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் போன்ற தொடர்களில் கழற்றி விடப்பட்டுள்ளார். அதற்கிடையே உணவருந்த சென்ற இடத்தில் ரசிகர்களுடன் சரியான சண்டையில் ஈடுபட்ட அவர் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரில் நார்த்தம்டன்ஷைர் அணிக்காக சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

குறிப்பாக முதல் போட்டியில் ஹிட் விக்கெட் முறையில் அவுட்டானதால் ஏற்பட்ட கிண்டல்களை அதற்கடுத்த போட்டியில் இரட்டை சதமடித்து உடைத்து அவர் 3வது போட்டியிலும் அதிரடியான சதமடித்து அனைத்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதிலும் குறிப்பாக ஸ்விங் வேகத்துக்கு தடுமாறி வந்த அவர் தற்போது அதற்கு சவாலான இங்கிலாந்து சூழ்நிலையில் சிறப்பாக செயல்பட்டு இழந்த ஃபார்மை மீட்டெடுத்து வருகிறார். இந்நிலையில் இந்த இளம் வயதிலேயே சிறிய கேரியரிலேயே நிறைய மேடு பள்ளங்களை கடந்து போராடி வரும் பிரிதிவி ஷா தற்போது சிறப்பாக செயல்பட்டு வருவது மகிழ்ச்சியளிப்பதாக பாராட்டியுள்ளார்.

- Advertisement -

குறிப்பாக தவறான இங்கிலாந்து மண்ணில் புதிய காற்றை சுவாசிக்கும் அவர் இன்னும் சிறப்பாக செயல்படுவதற்கான வாழ்த்துக்களை உத்வேகத்தையும் தெரிவிக்கும் அஸ்வின் இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “பிரிதிவி ஷா போன்றவருக்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஏனெனில் அவர் இந்த சிறிய கேரியரிலேயே நிறைய மேடு பள்ளங்களை பார்த்து விட்டார். அவரைப் போன்றவருக்கு இங்கிலாந்து போன்ற சொந்த மண்ணுக்கு வெளியே புதிய சூழ்நிலைகளில் புதிய வீரர்களை பார்த்து புதிய மூச்சை சுவாசிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது”
“ஏனெனில் இங்கிலாந்துக்கு சென்று கவுண்ட்டி தொடரில் விளையாடிய போதெல்லாம் நான் அப்படித்தான் உணர்ந்தேன். எனவே அவருக்கும் அந்த உணர்வுகள் கிடைக்கும் என்று நம்புகிறேன். இருப்பினும் இன்னும் அவர் தன்னுடைய வாழ்க்கையில் வேலையின் தத்துவம் என்ன செய்யக்கூடாது போன்றவற்றை கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. அதே சமயம் இங்கிலாந்தில் சில இளம் வீரர்களுக்கு கற்றுக் கொடுக்கும் சூழ்நிலையிலும் அவர் இருக்கிறார். அதுவும் உங்களுடைய கிரிக்கெட்டை மாற்றக்கூடியது. எனவே அவருக்காக நான் மிகவும் ஆர்வமடைந்துள்ளேன்”

இதையும் படிங்க:IND vs IRE : அயர்லாந்து டி20 தொடரில் சரித்திர சாதனையுடன் களமிறங்கி கம்பேக் கொடுக்கப் போகும் பும்ரா – விவரம் இதோ

“அவருடைய இன்னிங்ஸில் அடித்த பவுண்டரிகளை நான் பார்த்தேன். அது மிகவும் சிறப்பாக இருக்கும் அளவுக்கு அந்த இன்னிங்ஸ் இருந்தது. குறிப்பாக பேட்டை சுழற்றும் வேகத்தில் ஸ்பெசலிஸ்ட்டான பிரித்திவி ஷா திறமையானவர் என்பதை நாம் அறிவோம். அந்த இரட்டை சதத்தை தொடர்ந்து அவர் துர்ஹாம் அணிக்கு எதிராகவும் ஒரு சதமடித்துள்ளார்” என்று பாராட்டினார்.

- Advertisement -