- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இதை செஞ்சு பாருங்க.. விராட் கோலி வெறியாகி தன்னை யார்ன்னு காட்டுவாரு.. அஸ்வின் பேட்டி

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சூப்பர் 8 சுற்றில் விளையாடி வருகிறது. லீக் சுற்றில் தோல்வியை சந்திக்காமல் அசத்திய இந்தியா சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது. இதைத் தொடர்ந்து இந்தியா தங்களுடைய இரண்டாவது சூப்பர் 8 போட்டியில் வங்கதேசம் அணியை ஜூன் 22ஆம் தேதி எதிர்கொள்கிறது.

முன்னதாக இந்தத் தொடரில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி இதுவரை துவக்க வீரராக களமிறங்கி பெரிய அளவில் ரன்கள் குவிக்கவில்லை. எனவே மீண்டும் அவரை மூன்றாவது இடத்தில் களமிறக்க வேண்டும் என்பதே பலருடைய கோரிக்கையாக இருக்கிறது. இருப்பினும் இந்திய அணி வெற்றி நடை போட்டு வருவதால் அவர் துவக்க வீரராகவே விளையாடுவார் என்று நம்பப்படுகிறது.

- Advertisement -

அஸ்வின் கருத்து:
இந்நிலையில் விராட் கோலியை ஓப்பனிங்கில் நம்பாமல் 3வது இடத்தில் களமிறக்க வேண்டும் என அஸ்வின் கூறியுள்ளார். அப்படி செய்தால் அவர் கோபமடைந்து தன்னை யார் என்பதை உங்களுக்கு நிரூபிக்கிறேன் என்ற வகையில் செயல்படுவார் என ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார். ஏனெனில் பொதுவாகவே விராட் கோலியை சந்தேகப்படும் போது சிறப்பாக விளையாடி பதிலடி கொடுத்துள்ளதாக அஸ்வின் கூறியுள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

“விராட் கோலி போன்ற வீரரின் தன்னம்பிக்கையை டேமேஜ் செய்வதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. அவர் உங்களிடம் “என்னை நீங்கள் 3வது இடத்திற்கு கொண்டு வந்து விட்டீர்கள். உங்களுக்கு நான் யார் என்று காண்பிக்கிறேன்” என்று சொல்வார். அப்படிதான் அவர் பேட்டிங் செய்வார். அவரைப் பற்றி நன்கு தெரிந்ததால் இதை நான் சொல்கிறேன்” என்று கூறினார்.

- Advertisement -

அதே நிகழ்ச்சியில் மற்றொரு முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா பேசியது பின்வருமாறு. “கடந்த போட்டிக்கு பின் விராட் கோலி மனநிலையின் சிறு பகுதியை நான் பார்த்தேன். அது 5 நொடியாக இருக்கலாம். அவர் தனது ஆட்டத்தை பற்றி சக வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுடன் பேசினார். அவருடைய மனநிலையை பார்க்கும் போது இந்த மனிதர் அற்புதமான தன்னம்பிக்கையை கொண்டுள்ளார் என்பது தெரிகிறது”

இதையும் படிங்க: தலைமுறையில் ஒருமுறை மட்டுமே இந்த மாதிரி பிளேயர்ஸ் வருவாங்க.. இந்திய வீரரை பாராட்டிய இயன் பிஷப்

“அது அவரது தன்னுடைய திறமை மற்றும் நம்பிக்கை பற்றி தெரிந்து கொள்ளும் இடத்திலிருந்து வருகிறது. எனவே தன்னுடைய ஆட்டத்தில் இது ஒரு சிறு பிளவு மட்டுமே என்பதை அவர் அறிவார்” என்று கூறினார். இருப்பினும் விராட் கோலி தொடர்ந்து துவக்க வீரராகவே விளையாடி தன்னுடைய தரத்தை நிரூபிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

- Advertisement -