தலைமுறையில் ஒருமுறை மட்டுமே இந்த மாதிரி பிளேயர்ஸ் வருவாங்க.. இந்திய வீரரை பாராட்டிய இயன் பிஷப்

Ian Bishop 2
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பை உச்சகட்டத்தை தொட்டுள்ளது. இந்தத் தொடரில் 2007க்குப்பின் கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி லீக் சுற்றில் தோல்வியை சந்திக்காமல் சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்தது. அங்கேயும் ஆப்கானிஸ்தானை தோற்கடித்த இந்தியா அடுத்ததாக வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.

இந்த தொடரில் பந்து வீச்சுத் துறையில் எதிர்பார்த்ததை போலவே நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்ப்ரித் பும்ரா சிறப்பாக செயல்பட்டு இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். கடந்த முறை காயத்தால் விளையாடாத அவர் இம்முறை அயர்லாந்து மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான முதலிரண்டு போட்டிகளிலேயே அடுத்தடுத்து ஆட்டநாயகன் விருது வென்று இந்தியாவை வெற்றி பெற வைத்தார்.

- Advertisement -

தலைமுறையின் பவுலர்:
அதே வேகத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராகவும் 4 ஓவரில் வெறும் 7 ரன்கள் மட்டும் கொடுத்த அவர் 3 விக்கெட்டுகள் எடுத்து வெற்றியில் முக்கிய பங்காற்றினார். அந்த வகையில் டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 விதமான கிரிக்கெட்டிலும் வித்தியாசமான ஆக்சனை வைத்து எதிரணிகளை திணறடிக்கும் பும்ரா பல முன்னாள் ஜாம்பவான் வீரர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறார்.

அந்த வரிசையில் இணைந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் இயன் பிஷன் தலைமுறையில் ஒருமுறை மட்டுமே வரக்கூடிய பவுலர் என்று பும்ராவை பாராட்டியுள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஜஸ்ப்ரித் புத்திசாலியான நல்ல தொடர்பாளர். அவரிடம் வேகம் இருக்கிறது. மற்ற பவுலர்களை விட வேரியேஷன்களை எப்போது பயன்படுத்த வேண்டும் என்பதை அவர் நன்கு அறிந்தவர்”

- Advertisement -

“ஒவ்வொரு நாளும் நான் ஸ்டம்ப் வேட்டைக்கு செல்ல மாட்டேன் என்று அவர் சொல்வதை உங்களால் கேட்க முடியும். சில நாட்கள் அவர் யார்க்கர் பந்துகளை வீசுவார். சில நாட்கள் ஒய்ட் யார்கர் வீசுவார். சில நாட்களில் சூழ்நிலைகளை உணர்ந்து நான் மெதுவான அல்லது பவுன்சர் பந்துகளை வீசுவேன் என்று சொல்வார். இதனுடன் இன்னும் சில திறமைகள் இருக்கிறது”

இதையும் படிங்க: இந்தியா – வங்கதேசம் போட்டி நடைபெறும் ஆன்டிகுவா மைதானம் எப்படி? புள்ளிவிவரம், பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

“தனித்துவமான ஆக்‌ஷனை கொண்டுள்ள அவர் பந்தை வேகமாக கொண்டு வருகிறார். அதனாலேயே சில நேரங்களில் அவர் வீசும் ஃபுல் டாஸ் பந்துகள் அடிக்கப்படுவதில்லை. ஏனெனில் அது வேகமாக வருகிறது. அத்துடன் நீங்கள் பெயரையும் உருவாக்கி வைத்துள்ளீர்கள். மேத்தியூ ஹைடன் எப்போதும் கர்ட்டலி ஆம்ப்ரோஸ்க்கு எதிராக காலை வைக்க மாட்டார். ஏனெனில் ஆம்ப்ரோஸ் தனக்கென்று பெயரை உருவாக்கியுள்ளார். ஆனால் என்னை அடிக்க முயற்சிப்பார். அதே போல இந்த பையன் (பும்ரா) ஒரு தலைமுறை பவுலர்” என்று கூறினார்.

Advertisement