வங்கதேசத்துக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதனால் பாகிஸ்தானை போல வீழ்த்துவோம் என்று வசை பாடிய வங்கதேசத்தை தோற்கடித்த இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. அந்த வெற்றிக்கு தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 113 ரன்களும் 6 விக்கெட்டுகளும் எடுத்து முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார்.
முன்னதாக அந்தப் போட்டியில் 634 நாட்கள் கழித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் களமிறங்கிய ரிஷப் பண்ட் சதமடித்து 109 ரன்கள் விளாசி கம்பேக் கொடுத்தார். அதனால் அதிக டெஸ்ட் சதங்கள் அடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற தோனியின் சாதனையும் அவர் சமன் செய்தார். அத்துடன் தம்முடைய ஸ்டைலில் ஒற்றைக் கையில் சிக்சர்களை அடித்த அவர் வங்கதேச அணிக்கு ஃபீல்டிங் செட்டிங் வைரலானது.
கடவுளின் பாராட்டு:
இந்நிலையில் கார் விபத்தில் சந்தித்த ரிஷப் பண்ட்டை காயத்திலிருந்து மீண்டும் குணமடைய வைத்து இந்தியாவுக்கு விளையாட வைத்த மிராக்களை கடவுள் நிகழ்த்தியதாக ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ரிஷப் பண்ட் மீண்டும் கம்பேக் கொடுத்து களத்தில் விளையாடியது மிராக்கிள் போல இருக்கிறது”
“அதைக் கடவுள் அனுப்பியிருக்கலாம். அது தன்னம்பிக்கையை பொறுத்தது என்று சொல்வேன். கம்பேக் போட்டியில் அவருக்கு எந்த அழுத்தமும் இருந்ததாக தெரியவில்லை. முதல் இன்னிங்ஸில் அவர் நன்றாகவே பேட்டிங் செய்தார். அந்த வகையில் மீண்டும் வந்துள்ள அவர் தம்முடைய வழக்கமான பாணியில் ரன்கள் குவித்தது நன்றாக இருக்கிறது”
அஸ்வின் பாராட்டு:
“ரிஷப் பண்ட் பொழுதுபோக்காளர். அவர் களத்தில் விளையாடுவது அடுத்ததாக பேட்டிங் செய்ய காத்திருக்கும் பேட்ஸ்மேன்களுக்கு நல்ல அறிகுறி கிடையாது. ஏனெனில் அவர் விளையாடும் போது உங்களுக்கு வாய்ப்பு எப்போது வரும் என்பது தெரியாது. அந்தளவுக்கு அவர் பொழுதுபோக்காக விளையாடுகிறார். இங்கிருந்து அவர் இன்னும் நன்றாக முன்னேறுவார்”
இதையும் படிங்க: 1972 டென்னில் லில்லி மாதிரி இந்தியா.. பும்ராவை யூஸ் பண்ணா ஆஸியில் ஜெய்க்கலாம்.. இயன் சேப்பல் கருத்து
“தன்னம்பிக்கையில் தடுமாற்றம் இல்லாத அவருக்கு எப்போதும் இந்திய அணியில் ஆதரவு இருக்கிறது” என்று கூறினார். அந்த வகையில் சேட்டை மிகுந்த ரிஷப் பண்ட் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளது நவம்பர் மாதம் நடைபெறும் ஆஸ்திரேலிய தொடரை முன்னிட்டு இந்திய அணிக்கு வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது. இதை தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் செப்டம்பர் 27ஆம் தேதி கான்பூரில் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.



