- Advertisement -
ஐ.பி.எல்

ஐபிஎல்ல ரிட்டையராகி வெளிநாடு போக இதான் காரணம்.. 45 வயதிலும் தோனி இதை செய்றது ஆச்சர்யம்.. அஸ்வின்

இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த வருடத்துடன் சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெற்றார். இந்தியாவுக்காக 2வது அதிக விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைத்த அவர் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது ஐபிஎல் தொடரிலிருந்தும் அவர் ஓய்வு பெறுவதாக அறிவித்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியது.

ஏனெனில் 2025 ஐபிஎல் தொடரில் 9.75 கோடி என்ற பெரிய தொகைக்கு வாங்கப்பட்ட அவர் சிஎஸ்கே அணிக்காக சிறப்பாக விளையாடவில்லை. இருப்பினும் தரம் மற்றும் திறமைக்கு பஞ்சமில்லாத அவரை 2 – 3 கோடிகள் கொடுத்து வாங்குவதற்கு நிறைய அணிகள் தயாராக உள்ளன. அதனால் இன்னும் 2 ஐபிஎல் விளையாடுவதற்கு தகுதியான அஸ்வின் திடீரென ஓய்வு பெற்றது தமக்கு ஆச்சரியமளிப்பதாக முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.

- Advertisement -

ஓய்வுக்கான காரணம்:

இந்நிலையில் ஐபிஎல் தொடரில் விளையாடுவது உடலளவிலும் மனதளவிலும் பெரிய பாரத்தை ஏற்படுத்துவதாக அஸ்வின் கூறியுள்ளார். அதனாலேயே அதிலிருந்து ஓய்வு பெற்று தாம் விரும்பும் கிரிக்கெட்டை வெளிநாடுகளில் விளையாட விரும்புவதாக தெரிவிக்கும் அவர் 45 வயதிலும் தோனி ஐபிஎல் தொடரில் விளையாடுவது ஆச்சரியம் என்று பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

“இது மிகவும் திட்டமிடப்பட்ட முடிவு என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் எனது வாழ்க்கை முறை குறைவான பாதைகளில் பயணித்தது. அதற்காக குறிப்பிட்ட திசையில் செல்லும் நோக்கத்தில் நான் எதையும் செய்யவில்லை. வெளிநாட்டில் விளையாடும் எண்ணம் இருக்கிறது என்பதை மறுக்க மாட்டேன். என்னுடைய கேரியரின் இறுதிக்கட்டத்தில் நான் கிரிக்கெட்டை ரசிக்க விரும்புகிறேன்”

- Advertisement -

தோனிக்கு பாராட்டு:

“என்னைப் பொறுத்த வரை கிரிக்கெட் என்பது மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. ஐபிஎல் தொடரில் விளையாடலாமா? என்று யோசித்தேன். ஏனெனில் 3 மாத ஐபிஎல் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. அதில் விளையாடுவது மிகவும் சோர்வாக இருக்கிறது. அதனால் தான் எம்எஸ் தோனி போன்ற ஒருவரை பார்த்து நான் வியக்கிறேன். அவர் வருடத்தில் 3 மாதங்கள் மட்டுமே விளையாடுகிறார்”

இதையும் படிங்க: ஸ்ரீசாந்த் கன்னத்தில் ஹர்பஜன் அறைந்த வீடியோவை வெளியிட்ட லலித் மோடி.. 17 வருட பின்னணி பற்றி பேட்டி

“ஆனால் வயது அதிகரிக்கும் போது அந்த 3 மாதங்களில் விளையாடுவது பெரியது போல் தெரியும். 3 மாதங்களில் பயணம், விளையாடுதல், அதிலிருந்து புத்துணர்ச்சி பெறுதல் ஆகியவை எளிது கிடையாது. ஏனெனில் வயதின் காரணமாக உங்களின் புத்துணர்ச்சித் தன்மையை மீட்கும் திறன் குறையும். புத்துணர்ச்சியைப் பெற்ற பின் மீண்டும் நீங்கள் விளையாட வேண்டும். அவை அனைத்தையும் பற்றி நான் நினைத்தேன். அதில் ஆரோக்கியம் சம்பந்தமான முக்கிய விஷயங்கள் இருக்கிறது” என்று கூறினார். மேலும் வெளிநாட்டு தொடர்களில் விளையாடுவதற்கு விண்ணப்பித்துள்ளதாகவும் அஸ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -