2040இல் யோசிங்க.. ஹர்பஜன், கும்ப்ளேவிடம் கத்துக்கிட்டேன்.. இன்னும் சிறந்தவர் வருவாரு.. அஸ்வின் வெளிப்படை

R ashwin
- Advertisement -

தமிழக கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த 10 வருடங்களில் இந்திய அணியின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். குறிப்பாக 2011 உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி வெற்றிகளில் பங்காற்றிய அவர் 2017 வரை வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் இந்தியாவின் முதன்மை ஸ்பின்னராக செயல்பட்டார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இப்போதும் அஸ்வின் முதன்மை ஸ்பின்னராக செயல்பட்டு வருகிறார்.

அதில் இதுவரை 100 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 516 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். அதனால் ஹர்பஜன் சிங் மற்றும் கபில் தேவ் ஆகியோரை சமீபத்தில் முந்திய அவர் அனில் கும்ப்ளேவுக்கு பின் அதிக விக்கெட்டுகளை எடுத்த இந்திய வீரராக சாதனை படைத்துள்ளார். மேலும் 37 வயதாகும் அவர் 619 விக்கெட்டுகளை எடுத்துள்ள அனில் கும்ப்ளேவை முந்துவாரா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

- Advertisement -

கும்ப்ளே, ஹர்பஜன்:

இந்நிலையில் ஜாம்பவான் அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் ஆகியோரிடம் தாமும் சில விஷயங்கள் கற்றுக் கொண்டதாக ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார். மேலும் எப்போதுமே ஒருவரை விட மற்றொரு சிறந்தவர் வருவது இயல்பு என்று அஸ்வின் கூறியுள்ளார். அதனால் வருங்காலத்தில் தம்மை விட சிறந்த ஸ்பின்னர்கள் இந்திய அணிக்காக விளையாடலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் தற்போது ஐபிஎல் தொடரில் வீரர்களின் சம்பளத்தைப் பற்றி பேசுபவர்கள் 2040இல் எவ்வளவு இருக்கும் என்று யோசித்துப் பார்க்குமாறும் அஸ்வின் தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “அனில் கும்ப்ளே பாய், ஹர்பஜன் ஆகியோர் இந்திய அணியில் மரபை விட்டுச் சென்றுள்ளனர். நான் அதில் கற்றுக் கொண்டுள்ளேன்”

- Advertisement -

சிறந்த வீரர்கள்:

“இன்று நான் செய்யும் விஷயங்களை எல்லாம் அவர்களால் தான் செய்கிறேன். நான் செய்யும் அனைத்தும் அந்தப் பயணத்தில் ஒரு பகுதியாகும். நானும் ஒரு கட்டத்தில் விட்டுச் செல்வேன். அங்கிருந்து ஒருவர் வந்து முன்னோக்கி தொடர்வார். இது 400 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயம் போன்றது. ஒருவர் 100 மீட்டர் ஓடுவார் மற்றொருவர் அடுத்த 100 மீட்டர் ஓடுவார்”

இதையும் படிங்க: அஜித் அகர்கர் தலைமையிலான இந்திய தேர்வுக்குழுவில் புதிய உறுப்பினரை சேர்த்த பிசிசிஐ.. வெளியான அறிவிப்பு

“எனவே எப்போதுமே முன்னேற்றம் மற்றும் வீரர்கள் சிறந்தவர்களாக இருப்பார்கள். அதனால் என்னை விட சிறந்தவர் அல்லது அற்புதமானவர் வருவார் என்று 100% உறுதியாக என்னால் சொல்ல முடியும். வீரர்கள் ஐபிஎல் தொடரில் நிறைய சம்பாதிக்கிறார்கள் என்று அனைவரும் சொல்கின்றனர். ஒருவேளை ஐபிஎல் 2024இல் நடந்தால் இன்று இருக்கும் அதே சம்பளம் அப்போதும் இருக்குமா?” என்று கூறினார்.

Advertisement