இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக கௌதம் கம்பீர் செயல்பட்டு வருகிறார். ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை வெற்றியுடன் விடைபெற்ற ஜாம்பவான் ராகுல் டிராவிட்டுக்குப் பின் அவர் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருடைய வழிகாட்டுதலில் இலங்கைக்கு எதிராக முதலில் விளையாடிய டி20 தொடரில் வென்ற இந்தியா ஒருநாள் தொடரில் 27 வருடங்கள் கழித்து பரிதாபமாக தோற்றது.
அந்தத் தோல்விக்கு பேட்டிங் வரிசையில் தேவையற்ற மாற்றங்களை செய்த கௌதம் கம்பீர் முக்கிய காரணமாக அமைந்ததாக விமர்சனங்கள் எழுந்தன. முன்னதாக ராகுல் டிராவிட் பெரும்பாலான சமயங்களில் அமைதியாக இருக்கக்கூடிய நபராக அறியப்படுகிறார். அதே போல ரோஹித் சர்மாவும் களத்தில் அவ்வப்போது உணர்ச்சிகளை வெளிப்படுத்தினாலும் கிட்டத்தட்ட தோனி போல கூலான கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
தோனி மாதிரி:
மறுபுறம் கௌதம் கம்பீர் அதிகமாக கோபம் மற்றும் உணர்ச்சிவசப்படக்கூடிய நபர் என்பது பொதுவான கருத்தாகும். எனவே ரோஹித் சர்மாவுடன் இணைந்து அவர் பயிற்சியாளராக எந்தளவுக்கு வெற்றிகரமாக செயல்படுவார் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது. இந்நிலையில் அனைவரும் தோனி போல கூலாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.
ஏனெனில் ஒவ்வொருவருக்குள்ளும் வித்தியாசமான குணங்கள் இருக்கும் என்று அஸ்வின் கூறியுள்ளார். எனவே ரோஹித் சர்மா – கௌதம் கம்பீர் ஆகியோர் வெற்றிகரமாக செயல்படுவார்கள் என்று தெரிவிக்கும் அஸ்வின் இது பற்றி பேசியது பின்வருமாறு. “கௌதம் கம்பீர் தீவிரமானவர். ரோஹித் மற்றும் கௌதம் பாய் ஆகியோரின் தலைமைக்கு இடையே ஒற்றுமைகள் உள்ளன. ஆனால் ரோஹித் சர்மா அதை இலகுவாக வைத்திருப்பார்”
ரோஹித் – கம்பீர் கூட்டணி:
“கௌதம் பாய் தீவிரமான நபர். ராகுல் டிராவிட் பாய் போலவே அவரும் இந்திய கிரிக்கெட்டை பற்றி மிகுந்த ஆர்வம் கொண்டவர். இருவருமே இந்திய கிரிக்கெட்டின் மீது மிகுந்த ஆர்வத்தை கொண்டிருந்தாலும் வித்தியாசமானவர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். பொதுவாக எம்.எஸ். தோனி கூலாக இருப்பதால் அவரைப் போலவே அனைவரும் இருக்க வேண்டும் என்று மக்கள் விரும்புவார்கள்”
இதையும் படிங்க: கேரியரில் முன்னேறனும்ன்னா யோக்ராஜ்கிட்ட இருந்து தப்பிச்சுடுங்க.. அர்ஜுன் டெண்டுல்கருக்கு ரசிகர்கள் அட்வைஸ்
“அது அப்படி அல்ல. இங்கே ஒவ்வொருவருக்கும் சொந்த வழி இருக்கிறது. அதற்கு நாம் ஆதரவு கொடுக்க வேண்டும்” என்று கூறினார். அவர் கூறுவது போல தம்முடைய வழியில் கேப்டனாக செயல்பட்டு கௌதம் கம்பீர் 2 ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ளார். மேலும் இந்த வருடம் ஆலோசகராக அவர் கொல்கத்தா 10 வருடங்கள் கழித்து கோப்பை வெல்ல உதவியது குறிப்பிடத்தக்கது.



