நடப்பு சாம்பியனாக 2026 டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியானது லீக் சுற்று போட்டிகளின் முடிவில் 4 வெற்றிகளை பெற்று ஏ பிரிவில் முதல் அணியாக சூப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்தது. ஆனால் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் 76 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது.
இந்திய அணியை கடுமையாக விமர்சித்த : ரவிச்சந்திரன் அஷ்வின்
இதன்காரணமாக அடுத்து வரும் ஜிம்பாப்வே மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு செல்லும் என்கிற இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இந்த மோசமான தோல்விக்கு பிறகு இந்திய அணியின் மீது கடுமையான விமர்சனங்களும் இருந்து வருகிறது.
அந்தவகையில் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் இந்திய அணியை விமர்சித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஷ்வின் சில கருத்துக்களை முன்வைத்துள்ளார். அந்தவகையில் அவர் கூறியதாவது : தயவுசெய்து போட்டிக்கு முறையாக தயாராகாமல் வந்து வென்று விடலாம் என்று களத்திற்கு வராதீர்கள்.
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இந்த மோசமான தோல்வியை பார்க்கும் போது இந்திய அணி இன்னும் போட்டிக்கு முழுமையாக தயாராக வில்லை என்று அப்பட்டமாக தெரிகிறது. ஏனெனில் தென்னாப்பிரிக்கா அணியின் பந்துவீச்சாளர்கள் களத்தின் தன்மையை கருத்தில் கொண்டு இந்திய பேட்ஸ்மேன்களுக்கு எதிராக அதிகளவில் மெதுவான பந்துகளை வீசினர்.
இதையும் படிங்க : மெகா சாதனையுடன் ஜிம்பாப்வே அணியை வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ் – இந்திய அணிக்கு சிக்கல்
அதிலும் குறிப்பாக கேப்டன் சூரியகுமார் யாதவுக்கு எதிராக 22 பந்துகளில் 17 பந்துகளை மெதுவாக வீசியிருந்தனர். பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே தெளிவான திட்டத்தை தென்னாப்பிரிக்கா வீரர்கள் வைத்திருந்தனர். ஆனால் இந்திய அணியை பொறுத்தவரை எந்தவொரு திட்டமும் இல்லாமல் வந்து விளையாடியதாக தெரிகிறது என்று ரவிச்சந்திரன் அஷ்வின் விமர்சித்துள்ளார்.



