அதற்காக அஷ்வின் என்கிட்ட மன்னிப்பு கேட்டாரு, நான் நல்ல பேட்ஸ்மேன் – இளம் வீரர் பேச்சு

Ravichandran Ashwin Riyan Parag
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் கோப்பையை வெல்ல களமிறங்கிய 10 அணிகளில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்றில் அசத்திய குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. அதில் ராஜஸ்தானை தோற்கடித்த குஜராத் முதல் வருடத்திலேயே கோப்பையை வென்று அசத்தியது. இந்த சீசனில் பைனல் உட்பட பெரும்பாலான போட்டிகளில் ராஜஸ்தானுக்கு நம்பிக்கை நட்சத்திரம் ஜோஸ் பட்லர் மட்டுமே இரு மடங்கு சிறப்பாக 863 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை வென்று அசத்தினார். ஆனால் கேப்டன் சஞ்சு சாம்சன், சிம்ரோன் ஹெட்மையர் போன்றவர்கள் தொடர்ச்சியாக ரன்கள் எடுக்க தடுமாறியது பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.

அதனால் உள்ளூர் கிரிக்கெட்டில் ஓரளவு பேட்டிங் தெரிந்த தமிழகத்தின் அஷ்வினை 3-வது இடம் முதல் மிடில் ஆர்டரில் அனைத்து இடங்களிலும் அந்த அணி நிர்வாகம் களமிறக்கியது. அதில் ஒரு முறை கூட சோடை போகாத அஷ்வின் முடிந்த அளவுக்கு மிகச் சிறப்பாக செயல்பட்டார். குறிப்பாக வரலாற்றில் முதல் முறையாக அரை சதமடித்த அவர் சென்னைக்கு எதிரான கடைசி போட்டியில் 40* ரன்கள் அடித்து சூப்பர் பினிஷிங் கொடுத்து வெற்றி பெறச் செய்தார்.

- Advertisement -

கடுப்பேற்றிய பராக்:
அதன் காரணமாகவே புள்ளிப் பட்டியலில் 2-வது இடத்தை பிடித்த அந்த அணி குவாலிபயர் 1 போட்டியில் தோற்றாலும் மீண்டும் ஒரு வாய்ப்பை பெற்று இறுதிப் போட்டிக்கு சென்றது. அந்த அளவுக்கு பேட்டிங்கில் அசத்திய அஷ்வின் பேட்ஸ்மேன் என்ற பெயரில் 4 வருடங்களாக அணியில் இருந்து வரும் இளம் வீரர் ரியன் பராக்கை விட அசத்தலாகவே செயல்பட்டார். சொல்லப்போனால் அதனாலேயே அனைத்து போட்டிகளிலும் ரியன் பராக்கை விட மேல் பேட்டிங் வரிசையில் அஷ்வினை அந்த அணி நிர்வாகம் களமிறக்கியது.

அந்த நிலைமையில் குவாலிபயர் 1 போட்டியில் குஜராத்துக்கு எதிராக ராஜஸ்தான் பேட்டிங் செய்தபோது கடைசி ஓவரின் 5-வது பந்தில் யாஷ் தயால் வீசிய பந்து ஒய்ட்டாக இருந்ததால் அதை எதிர்கொண்ட அஸ்வின் ரன்கள் எதுவும் எடுக்கவில்லை. ஆனால் எதிர்ப்புறம் இருந்த ரியான் பராக் என்னவோ கடைசி பந்தில் தோனியை போல் சிக்ஸர் அடிக்கலாம் என்ற நினைப்புடன் சிங்கிள் எடுக்க வேகவேகமாக ஓடி வந்தார். இருப்பினும் அதை அஸ்வின் கவனிக்காததால் ரியன் பராக் ரன் அவுட்டானர். அதனால் கடுப்பான அவர் தன்னை விட வயதிலும் திறமையிலும் சாதனைகளிலும் மூத்த அஸ்வினை கடுமையாக முறைத்து கொண்டே பெவிலியன் திரும்பினார்.

- Advertisement -

மன்னிப்பு கேட்டார்:
எதுவுமே சாதிக்காத இந்த இளம் வீரர் பேட்டிங்கில் ஓரளவு சிறப்பாக செயல்பட்டு வரும் அஷ்வினை பார்த்து முறைத்தது ரசிகர்களை அதிருப்தியடைய வைத்தது. அந்த புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலானது. அதை தொடர்ந்து சந்தித்த கடைசி பந்தில் சிறப்பாக பேட்டிங் செய்த அஷ்வின் 2 ரன்கள் எடுத்ததால் 20 ஓவர்களில் ராஜஸ்தான் 188/6 ரன்கள் சேர்த்தது. இந்நிலையில் அந்தப் போட்டியில் தம்மை ரன்-அவுட் செய்வதற்காக அஸ்வின் மன்னிப்பு கேட்டதாக ரியன் பராக் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஒரு டைல் எண்டருடன் பேட்டிங் செய்யும்போது அஷ்வின் அதை செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் நான் பேட்டிங் செய்து கொண்டிருக்கும் போது ரன் எடுக்க ஓடாமல் அவ்வாறு செய்தது எனக்கு அதிர்ச்சியாக அமைந்தது. அதனால் அவரை முறைத்து கொண்டே நான் பெவிலியன் சென்றேன். இருப்பினும் அதன்பின் அஸ்வின் என்னிடம் வந்து அதற்காக மன்னிப்பு கேட்டார். ஏனெனில் அந்த தருணத்தில் வேறு எதையோ நினைத்துக்கொண்டு ரன் எடுக்காமல் இருந்துவிட்டார். ஆனால் நீங்கள் (ஊடகம்) அனைவரும் “சாகடிப்பதை போல் ரியன் பராக் அஷ்வினை முறைத்தார்” என்ற பிம்பத்தை உருவாக்கி விட்டீர்கள்” என்று கூறினார்.

- Advertisement -

நான் நல்ல பேட்ஸ்மேன்:
அதாவது தாம் ஒரு நல்ல பேட்ஸ்மேன் என்பதால் தம்மாலும் சிறப்பாக பேட்டிங் செய்ய முடியும் என்பதால் அஷ்வின் ரன் எடுக்க முன்வராதது தமக்கு அதிர்ச்சியாக அமைந்ததாக ரியன் பரக் தெரிவிக்கிறார். மேலும் பேட்டிங் பற்றி எதுவுமே தெரியாத டெயில் எண்டர்களை எதிர்ப்புறம் வைத்துக்கொண்டு அஷ்வின் அவ்வாறு செய்திருந்தால் அது சரியான முடிவு என்று தெரிவிக்கும் ரியன் பராக் தம்மை அதற்கு கூட தகுதி இல்லாதவர் என்று அஷ்வின் நினைத்ததாலேயே அவரை முறைத்ததாக கூறுகிறார்.

இதையும் படிங்க : உலகசாதனையை உடைப்பது நோக்கமல்ல, எனது நினைப்பு எல்லாம் இதில் மட்டும் தான் – உம்ரான் மாலிக்

ஆனாலும் போட்டி முடிந்த பின் அதற்காக மனம் வருந்தி அஷ்வின் தம்மிடம் மன்னிப்பு கேட்டதாக தெரிவித்துள்ள அவர் அதற்குள் ஊடகங்களும் ரசிகர்களும் தேவையற்ற வதந்திகளைக் கிளப்பியதாக தெரிவிக்கிறார்.

Advertisement