இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு இடையையான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் அஸ்வின் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளையும் இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 323 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ள அஸ்வின், விராட் கோலி தலைமையில் மட்டும் 200 விக்கெட்டுகளை வீழ்த்தியுளளார்.
இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் ஒரு கேப்டன் தலைமயில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் அஸ்வின். அதே போல டெஸ்ட் வரலாற்றில் ஒரு கேப்டன் தலைமையின் கீழ் குறைந்த போட்டிகளில் 200 விக்கெட்டுகளை கைபற்றிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் அஸ்வின். மேலும், டெஸ்ட் போட்டிகளில் குறைவான போட்டிகளில் 200 விக்கெட்டுகளை கைபற்றிய வீரர்கள் பட்டியலில் சர்வதேச அளவில் இரண்டாம் இடத்தை பிடித்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் சேன் வார்னேவுடன் இணைந்துள்ளளர் அஸ்வின்.
டெஸ்ட் போட்டிகளில் ஒரு கேப்டன் தலைமையில் குறைந்த போட்டிகளில் 200 விக்கெட்களை வீழ்த்திய வீரர்களின் விவரம்.
1. முரளிதரன் (இலங்கை) – 30 போட்டிகளில் 200 விக்கெட் (சானத் ஜெயசூர்யா தலைமயில்)
2. சேன் வார்னே (ஆஸ்திரேலியா) – 34 போட்டிகளில் 200 விக்கெட் (ரிக்கி பாண்டிங் தலைமையில்)
3. அஸ்வின் (இந்தியா) – 34 போட்டிகளில் 200 விக்கெட் (விராட் கோலி தலைமையில்)
மேலும், சர்வதேச அளவில் டெஸ்ட் போட்டியில் ஒரு கேப்டனின் கீழ் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் பட்டியலில் அஸ்வின் 14 வது இடத்தில் இருகிறார். இந்த பட்டியலின் முதல் இடத்தில் தென்னாபிரிக்க அணியின் வேக பந்து வீச்சாளர் டேல் ஸ்டேயின் முதல் இடத்தில் உள்ளார். மேலும் இந்த பட்டியலில் இடம் பெற்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் அஸ்வின்.
ஒரு கேப்டன் தலைமையில் அதிக விக்கெட்டுகளை குவித்த வீரர்களின் முழு பட்டியல்.
1. டேல் ஸ்டேயின் – 347 விக்கெட் (கிரயெம் சிமித் தலைமையில்)
2. மக்காயா என்டினி – 280 விக்கெட் (கிரயெம் சிமித்)
3. க்ரெய்க் மக்டெர்மாட் – 231 விக்கெட் (ஆலன் பார்டர் தலைமையில்)
4. முத்தையா முரளிதரன் – 230 விக்கெட் (சனத் ஜெயசூர்யா தலைமையில்)
5. ஆலன் டொனால்டு – 225 விக்கெட் (ஹான்ஸி குரொன்யே தலைமையில்)
6. டேனியல் வெட்டோரி – 219 விக்கெட் (ஸ்டீபன் பிளமிங் தலைமையில்)
7. மைக்கேல் ஹொல்டிங் 218 விக்கெட் (கிளைவ் லொயிட் தலைமையில்)
8. கிளென் மெக்ரா – 217 விக்கெட் (ரிக்கி பாண்டிங் தலைமையில்)
9. மால்கம் மார்ஷல் – 216 விக்கெட் (விவியன் ரிச்சர்ட்ஸ் தலைமையில்)
10. மெர்வ் ஹூகஸ் – 212 விக்கெட் (ஆலன் பார்டர் தலைமையில்)
11. முத்தையா முரளிதரன் – 203 விக்கெட் (அர்ஜுன ரணதுங்க தலைமையில்)
12. ஸ்டூவர்ட் பிரோட் – 202 விக்கெட் (அலஸ்டைர் குக் தலைமையில்)
13. ஷேன் வோர்ன் – 200 விக்கெட் (ரிக்கி பாண்டிங் தலைமையில்)
14. ரவிச்சந்திரன் அஸ்வின் – 200 விக்கெட் (விராட் கோலி தலைமையில்)