தோனி அவர் முடிவை பார்த்துக்கொள்வார். உ.கோ முடிந்து நான் அவரை பார்க்கக்கூட இல்லை – ரவி சாஸ்திரி பேட்டி

Ravi

இந்திய அணியின் முன்னணி வீரரான மகேந்திர சிங் தோனி இந்திய அணிக்காக டி20 உலகக்கோப்பை, 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி என அனைத்து உலக கோப்பைகளில் பெற்று தந்த ஒரே கேப்டன் ஆவார். ஆனால் தோனி தற்போது அவருடைய கடினமான ஒரு கட்டத்தில் உள்ளார்.

Dhoni

ஏனெனில் உலக கோப்பை தொடருக்குப் பின்னர் இந்திய அணியில் தோனி இன்னும் விளையாடவில்லை. மேலும் அதன் பின்னர் தற்போது நடந்த தென் ஆப்பிரிக்க டி20 தொடரில் அவர் இடம் பெறவில்லை. எனவே இனிவரும் தொடர்களில் தோனியிடம் கேள்விக்குறியாகவே உள்ளது. ஆனால் தோனி இதுவரை தனது ஓய்வு அறிவிப்பு குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.

இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தோனி குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது : தோனி ஒரு சிறந்த பிளேயர் தான் அதில் எந்த சந்தேகமும் இல்லை ஆனால் தேர்வாளர்கள் அணியில் இளம் வீரர்களை ஊக்குவிக்கவே அவர்களை தேர்வு செய்கிறார்கள். தோனி எதுவரை விளையாடுவார் என்று அவருக்கு மட்டுமே தெரியும். அவர் முடிவு செய்தால் மீண்டும் அணியில் விளையாடட்டும் அது அவருடைய முடிவு.

dhoni

இருப்பினும் இனி வரும் தொடர்களில் அவருக்கான வாய்ப்பு என்பது சூழ்நிலையைப் பொருத்து அமையும். உலக கோப்பை தொடர் முடிந்து நான் தோனியை இதுவரை சந்திக்க கூட இல்லை அவருடைய முடிவு எப்படி இருக்கும் என்று அவரே முடிவு செய்துகொள்வார். தற்போது அணியின் முன்னேற்றத்திற்காக நாங்கள் சில திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம் என்று ரவி சாஸ்திரி கூறியது குறிப்பிடத்தக்கது.