இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் இவர்தான். அப்போ 2013 உலகக்கோப்பையும் போச்சா – புலம்பி தள்ளும் ரசிகர்கள்

Ravi-shastri
- Advertisement -

இந்திய அணியின் முதன்மை பயிற்சியாளர் மற்றும் பீல்டிங், பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என அனைத்து வகையான பயிற்சியாளர் பதவியும் நடந்த உலகக் கோப்பைத் தொடரோடு முடிவடைந்தது. இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரின் காரணமாக அனைவரது பதவிக்காலமும் 45 நாட்கள் நீட்டிக்கப்பட்டது.

Ravi-Shastri

- Advertisement -

அதனைத் தொடர்ந்து பிசிசிஐ அனைத்து பயிற்சியாளர் பதவிக்கும் விண்ணப்பிக்க ஜூலை மாதம் 30 ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்தது. தொடர்ந்து நேற்று முன்தினத்தோடு அந்த விண்ணப்பிக்கும் நாள் முடிவடைந்தது. இந்த பதவிக்கு தகுதியான நபர்களை தேர்ந்தெடுக்க இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் அடங்கிய குழு கபில்தேவ் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தேர்வுக் குழுவின் தலைவரான கபில் தேவ் விராத் கோலியின் கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று கூறி உள்ளதாலும் மேலும் விராட் கோஹ்லி ரவி சாஸ்திரியை தொடர்ந்து ஆதரித்து வருவதாலும் அடுத்த பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது என்றே கூறவேண்டும். இரண்டாயிரம் விண்ணப்பங்கள் வந்தாலும் ரவிசாஸ்திரி நேரடியாக நேர்காணலில் கலந்து கொள்ளலாம் எனவும் அவருக்கு ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ravi koli 2

இந்நிலையில் ரவிசாஸ்திரி பயிற்சியாளர் ஆனால் இந்திய அணிக்கு உலக கோப்பை வெறும் கனவாக மாறிவிடும் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஏனெனில் 2017 ஆம் ஆண்டு பதவியேற்ற ரவி சாஸ்திரி இந்திய அணி தொடர்ந்து சிறப்பாக பயிற்சி அளித்து வந்தாலும் இந்திய அணி முக்கியமான உலக கோப்பை தொடர்களில் முக்கியமான அரையிறுதிப் போட்டிகளில் அடுத்தடுத்து தோல்வியடைந்து வெளியேறியது.

Ravi

இந்த உலகக்கோப்பை போட்டிகளின் முக்கியமான ஆட்டத்தின் தோல்விகளால் இந்திய அணி ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தி உள்ளது. மேலும் அவர் ரவி சாஸ்திரி ராசி இல்லாதவர் போன்று தோன்றுவதால் 2023 ஆம் ஆண்டும் அவர் அணியின் பயிற்சியாளராக இருந்தால் அந்த உலக கோப்பை அரையிறுதி வரை சென்று தோல்வியையே தழுவும் என்பது போல ரசிகர்கள் தங்கள் கருத்துகளை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement