கொரோனா வந்ததும் ஒருவழில இந்திய அணிக்கு நல்லதுதான். இப்போதா இதெல்லாம் பண்ண முடியும் – ரவி சாஸ்திரி கருத்து

Shastri
- Advertisement -

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று மிக அதிக வேகமாக பரவி வருகிறது. சீனாவில் உருவாகிய இந்த வைரஸ் தற்போது ஸ்பெயின், இத்தாலி மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளை கடுமையாக பாதித்து வருகிறது.

Corona-1

- Advertisement -

தற்போது இந்தியாவிலும் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி சென்று கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிற்கு உள்ளேயே இருக்கும் படி இந்திய அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் திரளும் கிரிக்கெட் தொடர்களும், கால்பந்து தொடர்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் இதுபோன்ற ஓய்வுகள் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர்களுக்கு கண்டிப்பாக தேவை என இந்திய பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது :

Ravi

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் கிடைத்திருக்கும் இந்த ஓய்வு என்பது இந்திய வீரர்களுக்கு மோசமானது கிடையாது. நியூசிலாந்து தொடருக்குப் பின் உடலளவிலும் மனதளவிலும் இந்திய வீரர்கள் சோர்வடைந்திருந்தார்கள். பல வீரர்கள் காயமடைந்தனர். இது அவர்களுக்கு தேவையான ஓய்வு என்று கூறியுள்ளார்.

- Advertisement -

இந்திய அணி கடந்த 10 மாதங்களாக அதிகமாக கிரிக்கெட் விளையாடி உள்ளது. கடந்த மே மாதம் இங்கிலாந்து சென்றது உலக கோப்பை தொடரில் பங்கேற்ற இந்திய அணி அதன் பின்னர் 10 மாதங்கள் கழித்து இந்தியாவிற்கு திரும்பியது குறிப்பிடத்தக்கது. நியூஸிலாந்து ஆஸ்திரேலியா என அனைத்து நாடுகளிலும் கிரிக்கெட் விளையாடிவிட்டு அவ்வப்போது இந்தியாவிற்கு வந்தது.

Ravi

இத்தனை மாத கிரிக்கெட்டிற்கு பின்னர் தற்போது கிடைத்துள்ள ஓய்வை இந்திய வீரர்களும் உடன் சென்ற பயிற்சியாளர்களும் வரவேற்றுள்ளனர். அதேபோன்று இந்த வருட இறுதியில் டி20 உலகக்கோப்பை தொடரும் நடைபெற இருப்பதால் இந்த சமயத்தில் வீரர்கள் தங்கள் உடல் அளவிலும், மனதளவிலும் தங்களை தயார்படுத்திக்கொள்ள இந்த ஓய்வு உதவும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement