ரோஹித் ஷர்மாவை மாற்றியே தீருவேன். சபதம் போட்டு ஜெயித்த ரவி சாஸ்திரி – என்ன சபதம் தெரியுமா ?

Shastri
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆனது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நான்காம் நாள் முடிவு வரை இங்கிலாந்து அணி தான் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் போட்டியின் இறுதி நாளில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா மற்றும் ஷமி ஆகியோரின் சிறப்பான பார்ட்னர்ஷிப் காரணமாக இந்திய அணி நல்ல முன்னிலை பெற்றது.

shami 2

- Advertisement -

இதன் காரணமாக ஐந்தாவது நாளில் மீதமுள்ள 60 ஓவர்களில் 272 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதன் பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி 120 ரன்களை மட்டுமே குவித்து ஆட்டமிழக்க 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரரான ரோகித் சர்மா முதல் இன்னிங்சில் தனது திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

இந்த போட்டியில் டாஸ் போடுவதற்கு முன்னால் மழை பெய்ததன் காரணமாக மைதானம் மந்தமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேலையிலும் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். முதல் இன்னிங்சில் 83 ரன்கள் அடித்து அயல்நாட்டில் அவருடைய அதிகபட்ச ரன்களாக அதை பதிவு செய்தார். ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அட்டகாசமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரோஹித் டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரிய அளவில் சாதிக்கவில்லை என்று கூறப்பட்டது.

rohith 1

ஆனால் கடந்த 2019 ஆம் ஆண்டிற்கு பின்னர் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ரோஹித் ஓப்பனராக களமிறங்கி சிறப்பாக விளையாடி வருகிறார். இதன்மூலம் தற்போது டெஸ்ட் வடிவத்திலும் நிரந்தர ஓப்பனராக மாறி உள்ளார். இந்நிலையில் இப்படி ரோஹித் டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதிப்பதற்கு காரணம் ரவி சாஸ்திரி தான் என்று “மிஷன் டாமினேஷன்” என்ற ஒரு புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் 2019ஆம் ஆண்டு ரோகித் சர்மா தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக ஓபனிங் இறங்கியபோது பயிற்சியாளர் ரவிசாஸ்திரி நிச்சயம் ரோகித் சர்மாவை நான் உலகின் தலைசிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேனாக மாற்றி காட்டுவேன் என்று கூறியுள்ளார்.

Rohith-2

அப்படி இல்லை என்றால் எனது கிரிக்கெட் வாழ்வின் தோல்வி அதுதான் என ஒப்புக் கொள்வதாகவும் அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ரவிசாஸ்திரி கூறியது போலவே தற்போது உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேனாக ரோகித் சர்மா மாறியுள்ளார். ஏனெனில் அன்மையில் வெளியான டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் துவக்க வீரராக இவர் மட்டுமே டாப் 10-ல் உள்ளார். அதுவும் கோலிக்கு அடுத்து ஆறாவது வீரராக ரோஹித் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement