எனது பயிற்சியில் இதுமட்டுமே இதுவரை நடக்கவில்லை. அதுவும் விரைவில் நடக்கும் – ரவி சாஸ்திரி நம்பிக்கை

Ravi
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் வீரரான கும்ப்ளே பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகியதை அடுத்து இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டார். கடந்த உலகக் கோப்பைத் தொடரோடு இவரது பதவிக்காலம் முடிந்ததும் இவரது செயல்பாடு இந்திய அணிக்கு திருப்திகரமாக இருந்ததால் மீண்டும் 2020 டி20 உலக கோப்பை தொடரை இவர் பயிற்சியாளராக அணி நிர்வாகத்தால் நியமிக்கப்பட்டார்.

Ravi

- Advertisement -

ஆனாலும் இவரது பயிற்சி காலத்தில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டாலும் முக்கிய ஐசிசி தொடர்களான 2015ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் 2016 டி20 உலக கோப்பை மற்றும் 2019 50 ஓவர் உலகக் கோப்பை என அனைத்து முக்கிய ஐசிசி போட்டிகளிலும் அரையிறுதி வரை சென்று தோல்வி அடைந்து வெளியேறியது ஐ.சி.சி கோப்பைகளை இதுவரை கைப்பற்றியதே கிடையாது.

இந்நிலையில் இது குறித்து தற்போது இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : ஐசிசி தொடர்களை இந்திய அணி வெல்ல வேண்டும் என்பதில் எனக்கு ஒரு மிகப்பெரிய ஆவேசம் இருக்கிறது. அந்த கனவை அடைய இந்திய அணியுடன் சேர்ந்து விடாமல் துரத்தி வருவதாகவும் விரைவில் அதனை நாங்கள் சாதிப்போம் என்றும் ரவிசாஸ்திரி கூறினார்.

Ravi-1

மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில் : நான் 1983ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் ஒரு பகுதியாக இருந்தேன். அதுமட்டுமின்றி தற்போது டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி நம்பர் 1 இடத்தில் இருக்கும் மூன்று ஆண்டுகளாக நான் பயிற்சியாளராக இருந்து வருகிறேன். ஆனால் இதுவரை எனது அணி உலக கோப்பையை மட்டும் வெல்ல முடியவில்லை எனவே இனிமேல் எனது அணியுடன் இணைந்து ஐசிசி உலகக் கோப்பையை கைப்பற்றும் கனவை மட்டும் விடாமல் துரத்துவேன் என்றும் அவர் கூறினார்.

Ravi

ஒரு அணியாக வெற்றி எண்ணிக்கை மற்றும் முடிவுகள் ஆகிய விடயங்களை கவனம் செலுத்தினால் ரசிகர்கள் இந்திய அணியின் செயல்பாட்டை ரசிக்க மாட்டார்கள். இந்திய அணியுடன் இணைந்து ஐசிசி கோப்பைகளை வென்று உலக கிரிக்கெட்டில் நூற்றாண்டின் சிறந்த அணிகளில் ஒன்றாக இந்திய அணியை நான் மாற்றுவேன் என்று ரவி சாஸ்திரி வாக்குறுதி அளித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement