சுந்தர் இந்த இடத்தில் தான் விளையாட வேண்டும். தினேஷ் கார்த்திக்கிடம் பேச இருக்கிறேன் – ரவி சாஸ்திரி பேட்டி

Shastri

இங்கிலாந்து உடனான டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-1 என்கிற கணக்கில் அபார வெற்றி பெற்றது. அணியின் வெற்றி குறித்து செய்தியாளர்களிடம் பேட்டி கொடுத்த இந்திய அணியின் முதன்மை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இந்திய இளம் வீரர்களின் திறமையை பற்றி அதிகம் பேசினார்.அதிலும் குறிப்பாக ரிஷப் பண்ட் மற்றும் வாஷிங்டன் சுந்தர் வெகுவாக பாராட்டினார்.
இருபத்தி ஒரு வயதில் இவர்கள் இவ்வளவு சாதனைகளைப் படைக்கும் பொழுது இதற்கு அவர்கள் எப்படி இருப்பார்கள் என்பது எனக்கு நன்றாக தெரியும்.

ஐபிஎல் தொடரில் இருந்து வந்த ரிஷப் பண்ட் முற்றிலும் மாறுபட்ட வீரராக இன்று திகழ்கிறார். கடினமான உழைப்பினாலும் மற்றும் கடினமான பயிற்சியாலும் இன்று தனது சிறந்த வெர்சனை அனைவருக்கும் காட்டிக் கொண்டிருக்கிறார். அவர் எவ்வளவு உழைத்தார் என்பது உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை மிகக் கடினமாக உழைத்தார்.

அதன் பரிசு இங்கிலாந்து அணிக்கு எதிரான இறுதி இன்னிங்ஸில் அவர் அடித்த சதம். அந்த சதம்தான் துவண்டு போன இந்திய அணியை சரிவின் பக்கத்தில் இருந்து மீட்டெடுத்து வந்தது. இனிவரும் காலங்களிலும் மேட்ச் வின்னராக ரிஷப் பண்ட் பல சாதனைகளை செய்வார்.
வாஷிங்டன் சுந்தர் அது பேட்டிங் மெருகேறி கொண்டு வருகிறது.

sundar 2

அவர் ஆஸ்திரேலியாவில் அடித்த இன்னிங்சை விட இங்கு இறுதி இன்னிங்ஸில் அவர் அளித்த 96* மிகவும் மாறுபட்ட வகையில் இருந்தது. அணியின் ஸ்கோர் ஒருகட்டத்தில் 300க்கு மேல் போனதில் அவர்தான் காரணம். இந்திய அணியில் இனி நம்பர் 6 இல் விளையாடக்கூடிய வீரர் அவரே. காலத்தின் போக்கில் தேவைப்பட்டால் அவரை முன்னே அனுப்பி டாப் ஆர்டரில் ஆடவைக்கும் முயற்சிப்போம்.

- Advertisement -

Sundar-1

தமிழக அணிக்காக ஆடி வரும் சுந்தர் இனி நம்பர் 4 இல் தான் விளையாட வேண்டும். அவர் ஒரு சிறந்த பேட்ஸ்மேன் அவர் அந்த பொஸிஷனில் ஆடினால் தான் சிறப்பாக இருக்கும்.இதுபற்றி தமிழக அணி குழு தலைவர்களுடனும், கேப்டன் தினேஷ் கார்த்திக்கிடமும் விரைவில் பேசுவேன் என்றும் கூறினார்.