ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்த வேளையில் இந்திய அணி ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது. அதன் காரணமாக எஞ்சியுள்ள இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு செல்லும் என்ற கட்டாயத்தில் உள்ளது.
ரிஷப் பண்ட் மீது எந்த தவறும் இல்ல :
அந்த வகையில் இந்திய அணிக்கு மிக முக்கியமான போட்டியான நான்காவது டெஸ்ட் போட்டியானது டிசம்பர் 26-ஆம் தேதி மெல்போர்ன் நகரில் துவங்கியது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணியானது 474 ரன்கள் குவித்து வலுவான நிலையில் இருந்த வேளையில் இந்திய அணி முதல் இன்னிங்ஸ் ஆரம்பத்தில் சற்று தடுமாற்றத்தை சந்தித்து விளையாடி வருகிறது.
குறிப்பாக இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் குவித்திருந்த வேளையில் மூன்றாம் நாளான இன்று ரவீந்திர ஜடேஜா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் பேட்டிங் செய்ய வந்தனர்.
இந்த போட்டியில் பொறுப்பை உணர்ந்து சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட் 37 பந்துகளை சந்தித்து 28 ரன்கள் மட்டுமே அடித்த நிலையில் தேவையில்லாத ஷாட் விளையாடி ஆட்டமிழந்தார் அவரது ஷார்ட் தேர்வு குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது காட்டமான விமர்சனங்களை முன் வைத்திருந்தனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி மட்டும் பண்ட்டிற்கு ஆதரவாக சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : ரிஷப் பண்ட் விளையாடிய விதத்தில் தவறு ஏதும் கிடையாது. ஏனெனில் பொதுவாகவே அவர் களத்திற்குள் வந்ததும் அதிரடியாக விளையாடி பெரிய ரன் குவிப்பை வழங்கி வெளியேறுவதை ஒரு அமைப்பாக செட் செய்து விட்டார். இந்த ஆஸ்திரேலியா தொடரில் நல்ல பந்துகளில் தான் அவர் ஆட்டம் இழந்து வருகிறார்.
இதையும் படிங்க : 300 பந்து.. வரலாறு காணாததை செஞ்சு.. இந்திய அணியின் உயிரை காப்பாற்றிய நிதிஷ் – சுந்தருக்கு பதான் பாராட்டு
இந்த மெல்போர்ன் இன்னிங்சை பொருத்தவரை சில தவறுகள் இருந்தது. இருந்தாலும் அது அவர் மீது தவறு கிடையாது. நிச்சயம் அவரால் மிகப்பெரிய இன்னிங்ஸ் விளையாட முடியும். அதேபோன்று இனிவரும் போட்டிகளில் சற்று முதிர்ச்சி அடைந்து சிங்கிள்ஸ் எடுத்து ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்யவும் அவர் பழக வேண்டும் என ரிஷப் பண்டிற்கு ரவி சாஸ்திரி அட்வைஸ் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.



