இவங்களும் மனிதர்கள் தான். அவங்களுக்கும் கொஞ்சம் ரெஸ்ட் வேணும் – ரவி சாஸ்திரி கோரிக்கை

Shastri
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நான்கு டெஸ்ட் போட்டிகள், ஐந்து டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும் இரண்டாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 13 முதல் 17ஆம் தேதி வரை சென்னையிலும் அதன் பிறகு மீதமுள்ள இரண்டு போட்டிகள் அகமதாபாத்தில் நடைபெற இருக்கிறது. இந்த டெஸ்ட் தொடர் முடிவடைந்ததும் டி20 தொடர் அகமதாபாத்திலும், ஒருநாள் தொடர் புனேவிலும் நடைபெற இருக்கிறது.

Rohith

- Advertisement -

ஏற்கனவே கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக ஆறு மாதங்கள் எந்தவித போட்டியிலும் இன்றி வீட்டில் இருந்த இந்திய வீரர்கள் அனைவரும் ஐபிஎல் தொடருக்காக ஐக்கிய அரபு அமீரகம் பயணித்தனர். அதன் பிறகு அந்த தொடர் முடிந்த கையோடு நேரடியாக ஆஸ்திரேலியா சென்ற இந்திய வீரர்கள் கிட்ட தட்ட ஒன்றரை மாதங்கள் ஆஸ்திரேலியாவில் தங்கி பெரிய தொடரில் விளையாடினர்.

அதனை தொடர்ந்து நாடு திரும்பிய இந்திய அணி உடனே மீண்டும் இங்கிலாந்து தொடரில் தற்போது விளையாடி வருகின்றனர். இந்த தொடரும் கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்கள் நடைபெறும் அதுமட்டுமின்றி அது முடிந்ததும் உடனேயே ஐபிஎல் தொடரில் கலந்து கொண்டு விளையாட இருக்கின்றனர். இந்நிலையில் இந்திய வீரர்களை இந்த தொடர்ச்சியான வேலைப்பலு குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ரவிசாஸ்திரி கூறுகையில் :

IND

கிரிக்கெட்டில் இருந்து ஒரு சிறிய இடைவெளி அதாவது ஓய்வு காலம் ஒவ்வொரு வீரருக்கும் கட்டாயம் வேண்டும் என்பதை நான் நம்புகிறேன். ஏனெனில் இப்போது இங்கிலாந்து தொடருக்கு பின்பு மீண்டும் ஐபிஎல் போட்டிகளில் விளையாட வேண்டும். அது முடிந்து வீரர்களுக்கு குறைந்தது இரண்டு வாரமாவது ஓய்வுக்காலம் அவசியம். ஏனெனில் கொரோனா பாதுகாப்பு வளையத்தில் நீண்ட நாட்களாக வீரர்கள் விளையாடுவதால் மனதளவில் பாதிப்பு நிச்சயம் ஏற்படும். நாம் எல்லோரும் மனிதர்கள் தான் கிரிக்கெட் வீரர்களும் அப்படித்தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

ind

அவர்களுக்கும் ஓய்வு என்பது அவசியம். அணி ஒட்டுமொத்தமாக சிறப்பாக விளையாடும் போது கிடைக்கும் பெருமையெல்லாம் அனைவருக்கும் மகிழ்ச்சி தான். எப்போதும் ஒவ்வொரு தொடரும் முக்கியமானது. இருந்தாலும் அணியில் பல வீரர்கள் மனதளவில் பாதிக்கப்படாமல் அவர்களுக்கு சரியான ஓய்வு அளித்தாக வேண்டும். ஒவ்வொரு பார்மேட்டிற்கும் தகுந்த நல்ல வீரர்கள் நமது அணியில் இருக்கிறார்கள். எல்லோரும் வாய்ப்புக்காகக் காத்திருக்கிறார்கள் எனவும் ரவிசாஸ்திரி பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement