என்ன ஆனாலும் சரி. டி20 உலககோப்பை டீம்ல அந்த பையனை எடுத்துருங்க – ரவி சாஸ்திரி ஆதரவு

Shastri
- Advertisement -

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரில் லீக் சுற்றோடு இந்திய அணி வெளியேறியதால் பெருத்த ஏமாற்றம் அடைந்த இந்திய அணியின் நிர்வாகம் தற்போது இந்திய அணியில் பல மாற்றங்களை செய்து இந்த ஆண்டு இறுதியில் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பைக்காக தற்போது இந்திய அணியை தீவிரமாக தயார் செய்து வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரை அடுத்து தென்னாப்பிரிக்கா, அயர்லாந்து, இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் என தொடர்ச்சியாக பல்வேறு அணிகளுக்கு எதிராக டி20 தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது.

IND vs WI 5th T0I

- Advertisement -

இந்த தொடர்களில் இந்திய அணியில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டும், சீனியர் வீரர்களுக்கு தொடர்ந்து சுழற்சி முறையில் வாய்ப்பளிக்கப்பட்டும் தரமான அணியை தற்போது இந்திய அணியின் நிர்வாகம் தயார் செய்து வருகிறது. இந்நிலையில் எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடருக்கான அணி தேர்வில் எந்தெந்த வீரர்களை தேர்வு செய்யலாம் என்பது குறித்தும் பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரியும் இந்திய அணியில் சேர்க்கக்கூடிய ஒரு வீரர் குறித்து தனது வெளிப்படையான கருத்தினை பகிர்ந்து கொண்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் எதிர்வரும் t20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியில் இடதுகை வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் இடம்பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.

Arshdeep Singh

இது குறித்து அவர் கூறுகையில் : ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடரில் பந்துவீச்சாளர்களின் பங்கு என்பது இந்திய அணிக்கு முக்கியமானதாக இருக்கும். அதோடு அந்த தொடரில் இந்திய அணி சிறப்பாக செயல்பட நிச்சயம் பவுலர்களே கை கொடுப்பார்கள் என்பதே என்னோட கருத்து.

- Advertisement -

அந்த வகையில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் அந்த மைதானங்களில் விளையாடுவதற்கு இடதுகை வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டால் அது மேலும் சாதகமாக இருக்கும். ஏனெனில் அணியில் ஏற்கனவே சீனியர் வீரர்களான புவனேஸ்வர் குமார், பும்ரா, முகமது ஷமி போன்ற வலது வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கும்போது கூடுதலாக இடதுகை வேகப்பந்து வீச்சாளர் இருப்பது இன்னும் இந்திய அணிக்கு பலத்தை அளிக்கும்.

இதையும் படிங்க : 2022 டி20 உலகக்கோப்பையில் கோப்பையை வெல்ல தகுதியான இந்தியாவின் ஐவர் பந்துவீச்சு கூட்டணி இதோ

எனவே நிச்சயம் இந்திய டி20 உலகக்கோப்பை அணியில் அர்ஷ்தீரீப் சிங் அந்த தொடருக்காக தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதே தன்னுடைய விருப்பம் என்று தனது ஆதரவினை அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement