இந்தியா திரும்ப முடியாமல் இங்கிலாந்தில் தவிக்கும் ரவி சாஸ்திரி – கொரோனா சரியாகியும் இப்படி ஒரு நிலையா ?

shastri
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே அன்மையில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின்போது நான்காவது போட்டியின் மத்தியில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரிக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டனர்.

shastri 1

- Advertisement -

லண்டனில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் முகக்கவசம் இன்றி கலந்து கொண்டதால் தான் இவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது என்று கூறினர். இவர்களை தொடர்ந்து 5வது டெஸ்ட் போட்டிக்கு முன்னர் இந்திய அணியின் பிசியோதெரபிஸ்ட் கொரோனா தொற்றால் பாதிப்படைந்ததால் வீரர்கள் பதட்டம் ஆயினர்.

இதன் காரணமாக 3ஆவது டெஸ்ட் போட்டி கொரோனா அச்சம் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதனால் அங்கிருந்த இந்திய வீரர்கள் ஐ.பி.எல் தொடருக்காக அமீரகம் சென்று தனிமை படுத்திக்கொண்டனர். அதேவேளையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் அவரது உதவியாளர்கள் அனைவரும் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டும் இந்தியா திரும்புவதில் சிக்கலை சந்தித்துள்ளனர்.

Bharath Arun

அவர்கள் எப்போது நாடு திரும்புவார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏனெனில் அங்குள்ள சுகாதாரத்துறை நடைமுறையின் படி விமானத்தில் செல்வதற்கு சிடி ஸ்கேன் ஸ்கோர் 38 க்கு மேல் இருக்க வேண்டும். அதாவது விமானத்தில் பயணிக்க தகுதியானவரா ? என்பதை உறுதி செய்ய வேண்டும். அப்படி உறுதி செய்து அந்த சான்றிதழ் கிடைத்தால் மட்டுமே அவர்கள் இந்தியா திரும்ப முடியும்.

இதனால் ரவிசாஸ்திரி மற்றும் அவரது உதவி பயிற்சியாளர்கள் என அவர்களது குழு தற்போது இங்கிலாந்திலேயே இருக்கின்றனர். இன்னும் இரண்டு நாட்களுக்கு பிறகு அவர்களுக்கு இந்த சான்றிதழ் வழங்கப்படும் என்றும் அதன் பிறகு அவர்கள் நாடு திரும்புவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement