எதிர்பாராத வகையில் பறிபோக இருக்கும் ரவி சாஸ்திரியின் பயிற்சியாளர் பதவி. காரணம் இதுதான் – விவரம் இதோ

Ravi-shastri

இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்குப் பின் ரவிசாஸ்திரி பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் பிசிசிஐ நிர்வாகத்தால் கபில்தேவ் தலைமையிலான கமிட்டி புதிய பயிற்சியாளராக மீண்டும் ரவிசாஸ்திரி தேர்வு செய்தது.

Ravi

அதன்படி 2021 டி20 உலகக் கோப்பை வரை ரவி சாஸ்திரி இந்திய அணியின் பயிற்சியாளராக இருப்பார் என்று நியமிக்கப்பட்டது. தற்போது ரவிசாஸ்திரி பதவிக்கு ஆப்பு வைக்கும் வகையில் ஒரு செயல் நடந்து உள்ளது. அது யாதெனில் கமிட்டியில் ரவிசாஸ்திரி தேர்வு செய்தவர்களில் இரண்டு வழிகளில் வருமானம் பெறுவதாக அதாவது இரட்டை பதவி வைத்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.

அந்த புகார் உறுதி செய்யப்பட்டால் அந்த கமிட்டி மூலம் நியமிக்கப்பட்ட ரவி சாஸ்திரியின் பதவியும் பறிக்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து தற்போது அது குறித்த விசாரணை நடைபெற்று வருவதால் ஒருவேளை இரட்டைப் பதவி வகிப்பது நிரூபிக்கப்பட்டால் ரவிசாஸ்திரி பதவி பறிபோகும்.

Ravi

அதன் பிறகு மீண்டும் புதிய பயிற்சியாளரை நியமிக்க மறுபடியும் ஒரு குழு அமைக்கப்பட்டு பயிற்சியாளர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஆனால் அப்படி தேர்ந்தெடுக்கப்பட்டால் ரவி சாஸ்திரியே புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட அதிக வாய்ப்பு உள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.