தவானை ஓய்வுபெறச்சொல்லி வற்புறுத்தும் ரவி சாஸ்திரி. என்னடா நடக்குது இங்க – விவரம் இதோ

Ravi
- Advertisement -

மழையால் இந்திய தென்னாபிரிக்க முதல் டி20 போட்டி ரத்துசெய்ப்பட்டதற்கு முன்பாக இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார். அதில் ஷிகர் தவானுடன் அமர்ந்திருக்கும் ரவிசாஸ்திரி காபி, மலைகள், தவானுடன் கிரிக்கெட் உரையாடல் என்று அந்த புகைப்படத்தை பகிர்ந்து குய்ப்ட்டு இருந்தார்.

- Advertisement -

இதனைக் கண்ட இந்திய ரசிகர்கள் என்ன சார் உங்கள் உடன் வழக்கமாக இருக்கும் மது பாட்டிலை காணவில்லை. ஒருவேளை காபியில் விஸ்கி கலந்து குடிக்கிறீர்களா ? என்பது போன்று ரவிசாஸ்திரியை கலாய்த்து கமெண்டுகளை பதிவிட்டு வந்தனர்.

மேலும் ஒருபடி சென்று என்ன தவானுடன் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள் ? ஏற்கனவே டெஸ்ட் அணியில் இருந்து அவரை நீக்கிவிட்டிர்கள். தற்போது அவரை முழுவதுமாக கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறச்சொல்கிறீர்களா ? என்பது போல கலாய்த்து கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். ரசிகர்களின் இந்த கேலி ரவி சாஸ்திரிக்கு எதிராக எப்போதும் வரம்பு மீறித்தான் செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement