அடப்பாவமே ரவி சாஸ்திரிக்கு கொரோனா உறுதியாம். அவரோடு மேலும் 3 பேருக்கு – ஏற்பட்ட நிலைமை

Shastri
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில் சமநிலை வகிக்கின்றன. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 4வது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 2ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

indvseng

- Advertisement -

இந்த நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணியானது 191 ரன்களை குவிக்க அதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணியானது 290 ரன்களை குவித்தது. பின்னர் 99 ரன்கள் பின்தங்கிய நிலையில் விளையாடத் தொடங்கிய இந்திய அணியானது நான்காம் நாளான இன்று இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது.

இந்நிலையில் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக தற்போது போட்டிக்கு இடையே பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

Ravi

ஏனெனில் ரவி சாஸ்திரியுடன் யார் யார் தொடர்பில் இருந்தாலும் அவர்களுக்கும் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் ரவிசாஸ்திரி உடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 3 பேர் தற்போது தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.

Bharath Arun

அதன்படி பந்துவீச்சு பயிற்சியாளர் பாரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் மற்றும் அணியின் பிசியோதெரபி நிதின் படேல் ஆகியோர் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். ஒருவேளை வீரர்கள் யாரேனும் கொரோனாவால் பாதிக்கப் பட்டால் நிச்சயம் அவர்களும் அடுத்த போட்டியில் விளையாட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement