நம்ம போகலாம்..! பஸ்சில் ஏற்றவில்லை..! கங்குலியை கதற விட்ட ரவி சாஸ்திரி..! வெளிவந்த ரகசியம்..! – ஏன் தெரியுமா..?

gangualy

இந்திய கிரிக்கெட் அணியில் தாதா என்று அழைக்கப்படுபவர் கங்குலி, இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரராக இருந்த கங்குலி , இவரது சர்ச்சையான சில செயலுக்கும் பெயர் போனவராக இருக்கிறார். இந்நிலையில் கங்குலியின் நேரம் தவறாமையில் இருந்த மெத்தன தனத்திற்கு தக்க பாடம் புகட்டியுள்ளார் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரி.
ganguly

இந்திய அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வருகிறார் ரவி சாஸ்திரி. இவருக்கும், முன்னாள் இந்திய வீரரான கங்குலிக்கும் என்றுமே சுமுகமான உறவு இல்லை என்று பல ஆண்டுகளாக கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் தனக்கும் கங்குலிக்கும் இடையே ஏற்பட்ட ஒரு சுவாரசியமான சம்பவம் ஒன்றை சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் பிரேக்ஃபாஸ்ட் வித் சாம்பியன்ஸ் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரவி சாஸ்திரி கூறுகையில்’
காலந்தவறாமை எனக்கு மிகவும் முக்கியம். காலம் தவறினால் அதை நான் ஏற்றுக்கொள்ளவே மாட்டேன் அது ஒரு சிறந்த பண்பாகும், அதுவும் நீங்கள் ஒரு அணியில் விளையாடும் போது அதை நீங்கள் கடைபிடித்தே ஆக வேண்டும்.
ravi
2007 வங்கதேசத்திற்கு இந்திய அணி சுற்றுப்பயணம் சென்றபோது நான் தான் அணியின் மேலாளர். முதல் போட்டியின் பயிற்சி சிட்டகாங்கில் நடைபெற்றது. நாங்கள் 9 மணிக்கு பேருந்தில் கிளம்ப திட்டமிட்டிருந்தோம். அதனால், புறப்படலாம் என்று கூறினேன். ஆனால், உள்ளூர் மேலாளர் கங்குலி இன்னும் வரவில்லை என்று கூறினார். அதற்கு நான் ,பரவாயில்லை அவரை விட்டுச்சென்று விடலாம்,அவர் காரில் வரட்டும் ‘ என்று தெரிவித்துள்ளாராம். ஆனால், இதில் நல்ல விடயம் என்னவெனில் அதற்கு பின்பு கங்குலி கிளம்புவதற்கு 10 நிமிடங்கள் முன்னதாகவே வந்துவிடுவாராம்.