Worldcup : உலககோப்பை அணியில் இடம்பெற மற்றொரு வாய்ப்பு உள்ளது – ரவி சாஸ்திரி பேட்டி

வரும் மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மடற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான

Ravi-Sasthiri
- Advertisement -

வரும் மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மடற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தயார் என்றே கூறலாம். இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.

Team-1

- Advertisement -

இந்நிலையில், இந்தியாவில் தற்போது ஐ.பி.எல் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிந்த கையோடு இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இங்கிலாந்து பறக்க உள்ளது. கடந்த பல தொடர்களாக இந்திய அணி மிகச்சிறந்த பார்மில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உலகக்கோப்பை தொடரின் இந்தியா அணியின் வீரர்கள் ஏப்ரல் 15 ஆம் தேதி அறிவிக்கப்பட்டனர்.

இந்த அணியில் கோலி கேட்டன் மற்றும் ரோஹித் துணைகேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும் அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் இதோ : 1. கோலி 2. ரோஹித் 3. தவான் 4. ராகுல் 5. ஜாதவ் 6. தோனி 7. ஹார்டிக் பாண்டியா 8. விஜய் ஷங்கர் 9. தினேஷ் கார்த்திக் 10. பும்ரா 11. புவனேஷ்குமார் 12. ஷமி 13. குல்தீப் யாதவ் 14. சாஹல் 15. ஜடேஜா

rayudu

இந்நிலையில் உலகக்கோப்பை இந்திய அணி குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேட்டி ஒன்றினை அளித்தார். அதில் அவர் கூறியதாவது : முதலில் 16 வீரர்களை இந்திய அணியில் தேர்வு செய்யவே முடிவு செய்தோம். ஆனால், விதிப்படி 15 பேர் கொண்ட அணியை தேர்வு செய்ய நேர்ந்தது. அதுமட்டுமில்லாமல் நான் இந்த தேர்வில் எனது ஆலோசனைகளை மட்டுமே வழங்கினேன். மற்றபடி அனைத்து தேர்வு முடிவுகளையும் கேப்டன் விராட் கோலி மட்டுமே எடுத்தார். ஆனால், இப்போதும் அணியில் இணைய ஒரு வாய்ப்பு உள்ளது.

pant 5

மேலும், 4 ஆவது வீரருக்கான பரிசீலனை பல மாதங்களாவே நடந்தே இறுதியில் விஜய் ஷங்கரை தேர்வு செய்தோம். இருப்பினும் வீரர்களின் வரிசையை எப்போது வேண்டுமானாலும் மாற்றும் எண்ணம் இந்திய அணியில் உள்ளது. உலகக்கோப்பை தொடர் நீண்ட தொடராகும் அதனால் யாருக்காவது தொடரின்போது காயம் ஏற்பட்டால் உங்களுக்கு உடனடியாக அழைப்பு வரும். ஆகையால், இந்திய அணியில் இடம்வேண்டும் என்று காத்திருப்பவர்கள் கடுமையாக பயிற்சி செய்து தங்கள் திறமையை தக்கவைத்து கொள்ளுங்கள். வாய்ப்பு எப்போது வேண்டுமானாலும் உங்கள் கதவை தட்டும்.

Advertisement