- Advertisement -
இந்திய கிரிக்கெட்

விராட் கோலி திமிர் பிடித்தவர், அடங்காதவர் தான்.. ஆனா அவரோட இந்த குணம் எனக்கு பிடிக்கும் – ரவி சாஸ்திரி

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்து விட்டார். அதனை தொடர்ந்து தற்போது ஒருநாள் போட்டியில் மட்டுமே விளையாடி வரும் அவர் 2027 ஒருநாள் உலகக்கோப்பை தொடரை கருத்தில் கொண்டு தனது அடுத்த கட்ட பயணத்தை தொடர்ந்து வருகிறார். அடுத்த ஆண்டு தென்னாப்பிரிக்கா மற்றும் நமீபியா நாட்டில் நடைபெற இருக்கும் இந்த உலக கோப்பை தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்ற கையோடு ஓய்வு அறிவிப்பை வெளியிட வேண்டும் என்ற எண்ணத்துடன் அவர் தொடர்ந்து விளையாடி வருகிறார்.

விராட் கோலியின் குணம் குறித்து பேசிய ரவி சாஸ்திரி :

இந்நிலையில் அண்மையில் இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2026 ஐ.பி.எல் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடிய போது அடைந்த காயம் காரணமாக தற்போது சொந்த மண்ணில் நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அவரால் விளையாட முடியவில்லை. அதன் காரணமாக அவருக்கு பதிலாக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்திய ஒருநாள் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

- Advertisement -

இருந்தாலும் விராட் கோலி மீண்டும் சரியான நேரத்தில் அணிக்கு திரும்புவார் என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் ரன் மிஷின் என்று அழைக்கப்படும் விராட் கோலி களத்தில் காண்பிக்கும் ஆக்ரோஷம் அவரை திமிராகவும், அடங்காதவர் மாதிரியும் காண்பிப்பதாக பல்வேறு தரப்பிலிருந்து விமர்சனங்கள் இருந்து வருகிறது. இவ்வேளையில் விராட் கோலியின் குணம் குறித்து இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

அந்த வகையில் அவர் கூறியதாவது : விராட் கோலி திமிர் பிடித்தவர், அடங்காதவர், எல்லாத்தையும் எல்லை வரைக்கும் கொண்டு செல்பவர் என்று விராட் கோலி குறித்து சொல்வது அனைத்தும் உண்மைதான். ஆனால் மைதானத்திற்கு வெளியே அவர் முற்றிலும் நேர்மாறானவர். ஆட்டத்தில் நுழையும் போது போர்க்குணம் கொண்ட ஒரு வீரராகவும், வெளியே வரும்போது மற்றொரு விதமாகவும் மாறும் குணம் கொண்டவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும்.

- Advertisement -

இதையும் படிங்க : அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடர்களில் இருந்து நீக்கப்பட்ட முகமது சிராஜ் – உண்மை காரணம் இதுதான்

அந்த வகையில் களத்தில் இருக்கும் விராட் கோலி மற்றும் வெளியே மாறுபட்ட மனிதராக இருக்கும் விராட் கோலி என இரண்டுமே அவரிடம் எனக்கு மிகவும் பிடிக்கும். அதேபோன்று டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை ஒரு மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்தவர் விராட் கோலி தான் என்றும் ரவி சாஸ்திரி கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -