இந்த வாய்ப்பை அவர் சரியா பயன்படுத்திகிட்டா இந்திய அணியில் தொடர்ந்து நீடிப்பார் – ரவி சாஸ்திரி கருத்து

Shastri
Advertisement

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடரில் சறுக்கலை சந்தித்த இந்திய அணியானது தற்போது அடுத்ததாக அங்கிருந்து நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடரின் முதலாவது t20 போட்டியானது வெலிங்டன் நகரில் நடைபெற இருந்த வேளையில் மழை காரணமாக இப்போட்டி கைவிடப்பட்டது.

INDvsNZ

இந்த தொடரில் இந்திய அணியின் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் ஹார்டிக் பாண்டியா தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியே இந்த டி20 தொடர் முழுவதும் விளையாட இருப்பதினால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் தற்போது உச்சத்தை தொட்டுள்ளது.

- Advertisement -

அதேபோல டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் சறுக்கலுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது சரியான வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லாததும் தான் என்று கூறப்பட்ட வேளையில் தற்போது இந்த நியூசிலாந்து தொடருக்கான அணியில் உம்ரான் மாலிக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Umran Malik

இதன் காரணமாக அவர் மீது தற்போது அனைவரது கவனமும் சென்றுள்ள வேளையில் உம்ரான் மாலிக்கிற்கு கிடைத்துள்ள இந்திய வாய்ப்பு குறித்து பேசியுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

உம்ரான் மாலிக் இந்தியாவின் அதிவேக பந்துவீச்சாளராக திகழ்கிறார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் அதிவேகப்பந்து வீச்சாளர்கள் எதிர் அணியை கலங்கடித்ததை நாம் பார்த்தோம். அந்த வகையில் உம்ரான் மாலிக்கிடம் இருக்கும் வேகம் நிச்சயம் அவருக்கு கை கொடுக்கும். அதோடு வேகத்தில் அவருக்கு இணையான மாற்றுவீரர் இந்திய அணியில் கிடையாது.

இதையும் படிங்க : டி20 உ.கோ-யில் அவங்க 2 பேருக்கும் வாய்ப்பு கிடைக்காதுனு அவங்களுக்கே தெரியும் – தினேஷ் கார்த்திக் ஓபன்டாக்

இந்த நியூசிலாந்து தொடரில் தனக்கு கிடைத்த வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்திக் கொண்டால் நிச்சயம் இந்திய அணியில் தொடர்ந்து நீடிப்பார் என உம்ரான் மாலிக் குறித்து ரவி சாஸ்திரி பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement