யார் துவக்க வீரர் என்பது பிரச்சனையில்லை. அணியின் இலக்கு இதுதான் – ரவி சாஸ்திரி அதிரடி

Ravi

நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர் ஆகியவை முடிவுற்ற நிலையில் தற்போது அந்த அணிக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது துவங்கவுள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக நடை போடும் என்று நாம் நம்பலாம்.

ind 1

மேலும் இந்த இரண்டு வெற்றிகள் மூலம் 120 புள்ளிகளைப் பெற்று 2021 ஆம் ஆண்டு லார்ட்ஸ் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி விளையாடுவது இலக்கு என்று ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். மேலும் தற்போது இந்திய அணி 360 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ரவி சாஸ்திரி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது : இறுதிப்போட்டியில் ஆட 100 புள்ளிகள் தேவை இந்த ஆண்டு 6 டெஸ்ட் உள்ளன.

இதில் நியூசிலாந்து அணிக்கு எதிராக 2, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4. இதில் 2 டெஸ்ட்களில் வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிப்போட்டியில் ஆட நல்ல நிலையில் இருப்போம் என்று கருதுகிறேன். எனவே இது ஒரு குறிக்கோள். இன்னொரு குறிக்கோள் உலகின் நம்பர் 1 அணி என்ற தகுதிக்கேற்ப ஆடுவது. ஏனெனில் இந்த அணி இதில்தான் மற்றவற்றை விட அதிக நம்பிக்கை வைத்துள்ளது. டெஸ்ட் போட்டிகளில் இதைத்தான் நாங்கள் எதிர்நோக்குகிறோம்.

IND

பிரிதிவி ஷா, ஷுப்மன் கில் இருவருமே சிறந்த திறமைசாலிகள். யாருக்கு வாய்ப்புக் கிடைக்கும் என்பதை விட இவர்கள் இருவருமே இங்கு இருக்கின்றனர். தேசிய அணியில் இடம்பெற்றுள்ளனர்.
ஷுப்மன் கில் அசாதாரண திறமை கொண்டவர், பேட்டிங் அணுகுமுறை தெளிவானது, பாசிட்டிவ் மனநிலையில் ஆடுகிறார். 20-21 வயதே ஆகும் ஒரு வீரருக்கு இது உற்சாகமான காலக்கட்டமாகும்.

- Advertisement -

Ind

ஷா, கில், ஆகியோர் ஒரே கிரிக்கெட் பள்ளியிலிருந்து வருபவர்கள், எனவே புதியப் பந்தை எதிர்கொள்வதில் அதிக ஆர்வமுள்ளவர்கள். பிரிதிவி ஷா, ஷுப்மன் கில் இடையே போட்டி நல்லதுதான் என்றார். பயிற்சி ஆட்டத்தில் இன்று ஷா டக் அடிக்க, அகர்வால் 1, ஷுப்மன் கில் டக். ஸ்காட் குக்கெலீனிடம் இவர்கள் ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.