சி.எஸ்.கே வெற்றிப்பாதைக்கு திரும்பணுனா அவரு ஒழுங்கா ஆடனும் – ரவி சாஸ்திரி ஓபன்டாக்

Shastri
- Advertisement -

இந்தியாவில் கடந்த வாரம் துவங்கி நடைபெற்று வரும் பதினைந்தாவது ஐபிஎல் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசன் ஆரம்பிப்பதற்கு முன்னர் கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகியதால் சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக ரவிந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டார். அவரது தலைமையின் கீழ் சென்னை அணி சிறப்பாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் கொல்கத்தா அணிக்கு எதிரான முதல் போட்டியிலும், லக்னோ அணிக்கு எதிரான இரண்டாம் போட்டியிலும் தோல்வியை சந்தித்தது.

CSK-1

- Advertisement -

இந்த இரண்டு போட்டிகளில் பெற்ற தோல்விக்குப் பின்னர் இன்று தங்களது மூன்றாவது போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக சென்னை அணி விளையாட உள்ளது. நடப்பு சாம்பியனான சிஎஸ்கே இந்த தொடரிலும் சிறப்பாக செயல்படும் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் தொடர்ச்சியாக தோல்வியை தழுவியுள்ளது ரசிகர்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சென்னை அணி இப்படி தொடர் தோல்விகளை பெற்றுள்ளதால் எவ்வாறு இந்த தோல்விகளிலிருந்து மீண்டு வரும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. இந்நிலையில் சிஎஸ்கே அணியின் இந்த தொடர் தோல்வி குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறுகையில் :

Ruturaj
Ruturaj Gaikwad

முதல் 2 போட்டிகளிலும் சென்னை அணி சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தியே தோல்வியை சந்தித்தது. இது கேப்டன் ஜடேஜாவுக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கும். சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் துவக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட் சற்று நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது நிச்சயம் அவசியம்.

- Advertisement -

ஏனெனில் டி20 கிரிக்கெட்டில் தொடக்க வீரர்கள் ரன் குவிப்பது அவசியமான ஒன்று எனவே ருதுராஜ் மீண்டும் ஃபார்முக்கு வந்தால்தான் சிஎஸ்கே அணியால் ஒரு நல்ல நிலையை அடைய முடியும் என்று கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : தற்போது ஓப்பனிங் ஜோடி தான் சென்னை அணிக்கு பின்னடைவை தந்து வருகிறது. ஒரு வேளை இரண்டு ஒப்பனர்களும் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் பவுலர்களுக்கும் அது கூடுதல் நம்பிக்கையை கொடுக்கும்.

இதையும் படிங்க : கட்டுனா இப்படி ஒரு மனைவியை கட்டணும்! ஆஸ்திரேலியாவுக்கு வேற லெவல் பெருமை சேர்த்த ஸ்டார்க் மனைவி

எனவே இனிவரும் போட்டிகளில் ருதுராஜ் சிறப்பாக நிதானமாக விளையாட வேண்டியது அவசியம். அவரிடம் நிறைய ஷாட்டுகள் இருக்கின்றது. துவக்கத்தில் சற்று செட்டிலாகி விளையாடினால் பின்னர் அதிரடி காட்ட முடியும் என்று ரவி சாஸ்திரி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement