இன்னும் 3-4 நாள்ல நீங்க ஆஸ்திரேலிய கெளம்பியே ஆகனும். இல்லனா கஷ்டம் தான் – சீனியர் வீரர்களை எச்சரித்த ரவி சாஸ்திரி

Shastri
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டி, 3 டி20 போட்டி மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் தற்போது 27ஆம் தேதி துவங்க இருக்கிறது. இந்த தொடருக்கான மூன்று விதமான அணிகளும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு ஆஸ்திரேலியா சென்றடைந்து 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு தற்போது தொடரில் கலந்துகொண்டு விளையாட தயாராகி உள்ளனர்.

INDvsAUS

- Advertisement -

இந்த தொடருக்கான டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ள இந்திய அணியின் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா மற்றும் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா ஆகியோர் டெஸ்ட் அணியில் இடம் பிடித்தாலும் காயம் காரணமாக தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி செய்து வருகின்றனர்.

மேலும் அவர்கள் தங்களது உடல் திறனை நிரூபித்து கூடிய விரைவில் ஆஸ்திரேலியா திரும்ப வேண்டும் என இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வெளிப்படையான கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ரோகித் சர்மாவும், இஷாந்த் சர்மாவும் தங்களது உடல் பகுதியை இங்கு மூன்று நான்கு நாட்களில் உறுதி செய்து ஆஸ்திரேலியா கிளம்ப வேண்டும்.

rohith 1

அப்படி இல்லை என்றால் டிசம்பர் 17ஆம் தேதி தொடங்கவிருக்கும் டெஸ்ட் தொடரில் அவர்கள் பங்கேற்க முடியாது என்று நேரடியாக எச்சரித்துள்ளார். ஏனெனில் அவர்கள் ஆஸ்திரேலியா வந்து 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு பயிற்சியில் ஈடுபட்டு டெஸ்ட் போட்டியில் களமிறங்க முடியும் இதனால் 27-ம் தேதிக்குள் அவர்கள் ஆஸ்திரேலியா பிளைட் ஏரியாக வேண்டும் என்று நேரடியாக கூறியுள்ளார்.

தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சிகளை மேற்கொண்டு வரும் இஷாந்த் சர்மா மற்றும் ரோஹித் சர்மா உடல் தகுதித் தேர்வினை சீக்கிரம் முடித்து அணியில் இடம்பெறுவார்கள் என்று ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement