- Advertisement -
இந்திய கிரிக்கெட்

நான் இருந்திருந்தா கண்டிப்பா ரோஹித்தை அந்த முடிவு எடுக்க விட்டிருக்க மாட்டேன் – ரவி சாஸ்திரி

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் போது ஐந்தாவது போட்டியில் மோசமான பேட்டிங் ஃபார்ம் காரணமாக தானாகவே அணியிலிருந்து விலகினார். அதன் காரணமாக பும்ரா அந்த போட்டியில் கேப்டனாக இந்திய அணியை வழி நடத்தினார். இருப்பினும் அந்த போட்டியிலும் இந்திய அணியால் வெற்றிபெற முடியாமல் போகவே இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் தொடரை இழந்தது.

நான் இருந்திருந்தா ரோஹித்தை விட்டிருக்க மாட்டேன் : ரவி சாஸ்திரி

அதன் பின்னர் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேப்டனாக மீண்டும் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் திடீரென டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் ரோகித் சர்மா ஓய்வை அறிவித்து வெளியேறினார். எனவே ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரே அவருக்கு கடைசி தொடராக மாறியது.

- Advertisement -

அதிலும் குறிப்பாக சிட்னி டெஸ்டில் விளையாடாமல் அவர் ஓய்வு பெற்றுள்ளது பலவிதத்திலும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நான் அந்த பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் பயிற்சியாளராக இருந்திருந்தால் நிச்சயம் ரோஹித் சர்மாவை தானாக விலகும் முடிவை எடுக்க விடாமல் பிளேயிங் லெவனில் விளையாட வைத்திருப்பேன் என முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்த ஐபிஎல் தொடரின் போது ரோகித் சர்மாவை நான் அடிக்கடி பார்க்க நேர்ந்தது. ஆனாலும் அவரிடம் அமர்ந்து பேசுவதற்கு போதிய நேரம் கிடைக்கவில்லை இருந்தாலும் ஒருமுறை அவரை மும்பையில் சந்தித்து பேசினேன்.

- Advertisement -

அப்போது நான் அவரிடம் நான் மட்டும் கோச்சாக இருந்திருந்தால் நிச்சயம் உங்களை அந்த சிட்னி போட்டியில் விளையாட வைத்திருப்பேன் என்று கூறினேன். ஏனெனில் ரோகித் சர்மா ஒரு மேட்ச் வின்னர் அவர் விளையாடியிருந்தால் நிச்சயம் முடிவு எப்படி வேண்டுமானாலும் மாறி இருக்கலாம் என்று கூறியிருந்தார்.

இதையும் படிங்க : தோனி, சிஎஸ்கே அணியை இப்படி அவமானப் படுத்துவது சரியல்ல.. ஆர்சிபி ரசிகர்களை விளாசிய உத்தப்பா

ஏற்கனவே டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெற்றுவிட்ட ரோகித் சர்மா அடுத்ததாக 2027 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெறயிருக்கும் ஒருநாள் உலக கோப்பை தொடர் வரை விளையாடுவார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -