இவர் இந்திய அணியில் இருப்பது அணிக்கு கூடுதல் பலம். ஆஸ்திரேலிய அணிக்கெதிரான வெற்றிக்கு பிறகு – ரவி சாஸ்திரி

Shastri
- Advertisement -

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. கடந்த 17ம் தேதி பகலிரவு போட்டியாக நடந்த முதல் டெஸ்ட் தொடரில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை பெற்றது. இந்நிலையில், தற்போது சிறப்பாக நடைபெற்று முடிந்த 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று ஆஸ்திரேலிய அணியை பழிதீர்த்தது. இதன்மூலம் இந்திய அணி 1-1கணக்கில் தொடரை சமன் செய்துள்ளது.

Gill

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அதிரடி பேட்ஸ்மேன்கள் பர்ன்ஸ் மற்றும் ஸ்டீவன் ஸ்மித் டக் அவுட் ஆகியுள்ளனர். இவர்களைத் தொடர்ந்து கிரிஸ் கிரீன், டிம் பெய்ன் ஆகியோர் மிக சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இந்திய பந்துவீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் தங்களது விக்கெட்டை இழந்து 195 ரன்களை குவித்தனர்.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 10 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்களை பெற்று 131 ரன்கள் முன்னிலை வகித்தனர். இந்த முதல் இன்னிங்சில் இந்திய அணியின் கேப்டன் ரஹானே சதம் விளாச, ஜடேஜா அரைசதம் விளாசினார். இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 200 ரன்களை பெற்று 10 விக்கெட்களையும் இழந்தது. இதன் மூலம் 70 எடுத்தால் வெற்றி இழக்குடன் களமிறங்கிய இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

jadeja

இந்நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இந்திய ஆல்ரவுண்டர் ஜடேஜாவை புகழ்ந்து பேசியுள்ளார். அப்போது அவர் “ஜடேஜா தான் இந்திய அணியின் சிறந்த ஆல்ரவுண்டர். இவர் தனது பேட்டிங் பவுலிங் மற்றும் பீல்டிங் என அனைத்திலும் தன்னை நிரூபித்து வருகிறார். இவர் 5வது அல்லது 6வது எந்த இடத்தில் இறங்கினாலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் இருக்க மாட்டார்.

jadeja 1

இவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 57 ரன்கள் குவித்தும் மற்றும் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இந்திய அணியின் முக்கிய ஆல்-ரவுண்டராக தற்போது ஜடேஜா இருக்கிறார்” ஜடேஜா அணியில் இருப்பதால் பேட்டிங் மட்டும் பவுலிங் என இரண்டிலும் அது இந்திய அணிக்கு கூடுதல் பலத்தை தருகிறது என்று இந்திய தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி புகழ்ந்த பேசியுள்ளார்.

Advertisement