ஆஸ்திரேலிய அணியை அடக்க இந்த 5 வீரர்கள் போதும்னு நெனைக்குறேன் – கெத்தாக பேசிய ரவி சாஸ்திரி

Ravi

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், டி20, ஒருநாள் என மூன்று வகையான தொடர்களில் விளையாட இருக்கிறது. இதற்காக இந்திய அணி வீரர்கள் தற்போது சிட்னி மைதானத்தில் பயிற்சி செய்து வருகிறார்கள். 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் வீரர்கள் மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். அதன் பின்னர் நவம்பர் 27ஆம் தேதி ஒருநாள் தொடர் தொடங்கப் போகிறது.

INDvsAUS

இது முடிந்த பின்னர் டி20 மற்றும் டெஸ்ட் தொடர் நடைபெறும். 2018 ஆம் ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று விளையாடிய போது எளிதாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது. அந்த வெற்றி பாதையை மீண்டும் உருவாக்கும் வகையில் இந்த முறை இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியா சென்றுள்ளனர். எப்படியாவது இந்த முறையும் கோப்பையை வெல்ல வேண்டும் என்று மிகச்சிறந்த இந்திய அணி தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்பட்டிருக்கிறது .

குறிப்பாக சென்ற முறை இந்திய அணி வென்றது காரணம் அந்த அணியில் இருந்த மிகச்சிறந்த பந்துவீச்சாளர்கள் தான் முகமது சமி, ஜஸ்பிரித் பும்ரா போன்ற வீரர்கள் மிகச் சிறப்பாக பந்து வீசினார். அதேபோல் இந்த முறையும் அப்படிப்பட்ட பந்துவீச்சாளர்கள் இருக்கின்றனர். இவர்களை வைத்து இந்த முறையும் வெற்றி பெறுவோம் என்று பேசியிருக்கிறார் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி. அவர் கூறுகையில்….

Ravi

நமது இளம் பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக பந்து வீசி வருகின்றனர். முகமது சமி, ஜஸ்பிரித் பும்ரா, நவதீப் சைனி, உமேஷ் யாதவ், முகமது சிராஜ் போன்ற பந்துவீச்சாளர்கள் மிகத் துடிப்பாகவும் அனுபவத்துடன் பந்து வீசிவருகின்றனர். இதில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சமி ஆகியோரைப் பற்றி பேசவே தேவையில்லை.

- Advertisement -

உமேஷ் யாதவ் அனுபவ வீரர். முகமது சிராஜ் மிகச் சிறப்பாக பந்து வீசி கூடியவர். இவர்கள் எல்லாம் நன்றாக வீசி விட்டால் இந்திய அணி வெற்றி பெறும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை குறிப்பாக இந்த ஐந்து பந்துவீச்சாளர்கள் போதும் நமது வெற்றிக்கு என்று தெரிவித்துள்ளார் ரவி சாஸ்திரி.