தோல்வி தேவைதான். இதெல்லாம் நமக்கு தேவை கண்டிப்பா அனுபவிச்சி தான் ஆகனும் – ரவி சாஸ்திரி பேட்டி

Ravi-shastri
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதனை தொடர்ந்து தொடர் விமர்சனங்களால் இந்திய அணி தற்போது கலங்கி நிற்கிறது.

Ind-lose

- Advertisement -

இந்நிலையில் இந்த தோல்வி குறித்து பலரும் பல கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில் தற்போது இந்திய அணி பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கருத்தினைத் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : எப்போதும் வெற்றி பெற்றுக் கொண்டே இருப்பது என்பது சலித்து விடும் முதல் டெஸ்ட் தோல்வி போன்று நம்மை அசைத்துப் பார்த்துள்ளது.

இதுபோன்ற தோல்வி தேவை இந்த தோல்வி இந்தியனுக்கு நல்லது ஏனெனில் அணி வீரர்களின் மனநிலையை கொஞ்சம் அது விலாசபடுத்தும் மேலும் வெற்றி பெற்றுக்கொண்டே இருக்கிறோமே தோல்வியே கிடைக்காதா ? என்று மனம் நினைக்கும் அதனால் இந்த தோல்வி தேவைதான். இந்தத் தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள நிறைய பாடங்கள் உள்ளன.

ind-2

இந்திய அணி வீரர்கள் எந்த மாதிரி உத்தியைக் கையாண்டார்கள் என்பது புரிந்துள்ளது. இப்போது இரண்டாவது போட்டிக்கு தயாராக உள்ளோம். அடுத்த போட்டியில் நிச்சயம் இந்திய அணிகளுக்கு சவால் கொடுக்கும். இந்த போட்டியில் விளையாடுகிறது பிரச்சினை கிடையாது. ஆனால் இந்த போட்டிக்கு ஏற்றார் போல் மாறி நாம் சிறப்பாக விளையாட வேண்டும் என்று ரவி சாஸ்திரி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement