இந்திய அணியின் பேட்டிங் பர்பெக்ட். ஆனா பிரச்சனையே இங்குதான் தான் உள்ளது – ரவி சாஸ்திரி பேட்டி

Shastri
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் 16-ஆம் தேதி துவங்கும் டி20 உலக கோப்பை தொடரானது நவம்பர் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. மொத்தம் 16 அணிகள் இந்த தொடரில் பங்கேற்பதால் கோப்பையை வென்று சாம்பியன் பட்டம் வெல்லப்போகும் அணி எது என்பது குறித்து எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்த டி20 உலக கோப்பை தொடரில் கோப்பையை வெல்லும் என்று பெரும்பாலானோர் உறுதியாக நம்பும் அணியாக இந்திய அணி திகழ்கிறது.

INDIA Arshdeep Singh Harshal Patel

- Advertisement -

இந்திய அணி பேட்டிங்கில் பெரிய பலத்தை கொண்டிருந்தாலும், பந்துவீச்சில் சற்று பலவீனமாக இருக்கிறது என்று பலரும் கூறி வருகின்றனர். ஏனெனில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ரா மற்றும் தீபக் சாகர் ஆகியோர் இந்த தொடரில் இருந்து வெளியேறி உள்ளதால் இந்த தொடரில் இந்திய அணியின் பவுலிங் எவ்வாறு அமையப்போகிறது என்பதே அனைவரது கேள்வியாகவும் உள்ளது.

இந்நிலையில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டையும் தாண்டி இந்திய அணியின் பீல்டிங் மிகவும் மோசமாக உள்ளது என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

IND

இது குறித்து அவர் கூறுகையில் : இந்திய அணியுடன் நான் 6-7 வருடங்களாக இருந்துள்ளேன். முதலில் இருந்த இந்திய அணியை விட தற்போது இருக்கும் இந்திய அணியில் பேட்டிங் மிகச் சிறப்பாகவே உள்ளது. ஆனாலும் பீல்டிங்கை பொருத்தவரை இந்தியா இன்னும் நிறைய பயிற்சிகளை எடுக்க வேண்டியது உள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : ஆஸ்திரேலிய மைதானங்களில் சூரியகுமார் யாதவின் ஆட்டம் எடுபடுமா? – டேல் ஸ்டெயின் அளித்த பதில் இதோ

ஏனெனில் எளிதாக இந்திய அணி வீரர்கள் கேட்ச்களை தவறவிடுகின்றனர். எனவே இந்திய அணி ஜெயிக்க வேண்டுமெனில் ஒவ்வொரு போட்டியிலும் பேட்டிங்கில் 15 முதல் 20 ரன்கள் அதிகமாக குவிக்க வேண்டும். இல்லையெனில் பீல்டிங்கில் திறம்பட செயல்பட வேண்டும் என ரவி சாஸ்திரி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement