தோனியே விரைவில் “தேங்க்யூ வெரி மச்” சொல்வார். முக்கிய தகவலை சூசகமாக தெரிவித்த – ரவி சாஸ்திரி

Ravi-Shastri
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி வீரரான தோனி உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் எந்தவித போட்டியிலும் இதுவரை விளையாடவில்லை. அதன் பின்னர் இந்திய அணி தொடர்ச்சியாக பல்வேறு தொடர்களில் விளையாடி வந்தாலும் கடந்த ஆறு மாதங்களாக எந்த ஒரு போட்டியிலும் தோனி பங்கேற்காததால் ஒப்பந்த வீரர்களுக்கான பட்டியலில் இருந்து அவரது பெயர் நீக்கப்பட்டது. இதனால் தோனி இனிமேல் விளையாடுவது சந்தேகம் என்ற தகவலும் எழுந்துள்ளது.

Dhoni

- Advertisement -

இந்நிலையில் ஸ்டார்ஸ்போர்ட்ஸ்-க்கு அளித்த பேட்டி ஒன்றில் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறுகையில் : ஐபிஎல் தொடர் வர உள்ளது எல்லோருக்கும் இது தெரியும். இது தோனிக்கும் நன்றாக தெரியும். விராட் கோலி அவரது பேட்டிங்கை காண்பார் அதேபோல தேர்வாளர்களும் தோனியை மிக தீவிரமாக உற்று நோக்குவார்கள். எல்லாவற்றிற்கும் விட என்ன நடக்கப்போகிறது என்பது தோனிக்கு மிக நன்றாக தெரியும். அவர் தன்னுடைய திறமையை நிச்சயம் இந்த ஐபிஎல் தொடரில் வெளிக்காட்ட வேண்டும்.

அவரைப்பற்றி உங்களுக்கும் தெரியும். எங்களுக்கும் தெரியும் அவர் மிகவும் நேர்மையானவர். தன்னால் விளையாட முடியவில்லை என்று அவர் கருதியதால் டெஸ்ட் போட்டிகளை கைவிட்டார் அவர் நினைத்திருந்தால் 100 டெஸ்ட் போட்டிகளில் நிறைவுசெய்து இருக்கலாம். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை தன்னுடைய திறன் செயல்படாத போது டெஸ்ட் போட்டிகளில் இருந்து அவர் ஓய்வு அறிவித்தார்.

dhoni

இந்நிலையில் தற்போது தொடங்கவுள்ள ஐ.பி.எல் தொடருக்காக தோனி பயிற்சியை தொடங்கி விட்டாரா ? இல்லையா ? என்பது தெரியவில்லை. ஆனால் இந்த ஐபிஎல் தொடரில் அவர் முனைப்புடன் விளையாடுவார் என்று நம்புகிறேன். இந்த ஐபிஎல் தொடரில் சரியாக விளையாடவில்லை என்றால் அவர் “தேங்க்யூ வெரி மச்” என்று சொல்லிவிடுவார் என்று ரவிசாஸ்திரி கூறினார். இதன்மூலம் ஐபிஎல் தொடரில் தோனி சாதிக்க விட்டால் நிச்சயம் இந்திய நிர்வாகம் அவரை ஓய்வுக்கு வற்புறுத்தும் என்றே தெரிகிறது.

Advertisement