ஒருநாள் போட்டிகளில் விரைவில் தோனி ஓய்வு பெறவுள்ளார். முக்கிய அறிவிப்பை வெளியிட்ட – ரவி சாஸ்திரி

Ravi

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவில்லை. மேலும் கடந்த சில தொடர்களாகவே அணியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டு வருகிறார். இதனால் தோனியின் ரசிகர்கள் எப்போது மீண்டும் தோனி கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பார் என்ற பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

Dhoni-1

இந்நிலையில் ஏற்கனவே ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தோனி எனது ஓய்வு முடிவு குறித்தும் எனது கிரிக்கெட் குறித்தும் ஜனவரி மாதம் வரை எந்த கேள்வியும் கேட்காதீர்கள் என்று தெரிவித்திருந்தார். பி.சி.சி.ஐ யின் தலைவர் கங்குலியும் தோனியின் ஓய்வு குறித்த முடிவு அவரே தீர்மானிப்பார் என்று தெரிவித்திருந்தார்.

தோனி ஓய்வு அறிவிக்காவிட்டாலும் இனிமேல் அவருக்கு அணியில் இடம் கிடைக்க வாய்ப்பு இல்லை என்பதை தேர்வு குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் மறைமுகமாக ஏற்கனவே தெரிவித்திருந்தார். அதன்பின் இந்திய அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரியும் தோனி மீண்டும் அணியில் இடம் பெறுவதற்கு ஐபிஎல் தொடர் தான் அவரது இடத்தை நிர்ணயிக்கும் என்றும் கூறியிருந்தார்.

Dhoni 1

இந்நிலையில் தற்போது தோனி குறித்து மீண்டும் ஒரு கருத்தினை ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். அதன்படி தோனி குறித்து பேசிய ரவிசாஸ்திரி கூறுகையில் : தோனியுடன் நான் பேசினேன் இது எங்களுக்குள் எங்களுக்குள் நடந்த ஒரு உரையாடல் தான். அதில் அவர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். அவர் விரைவில் ஒருநாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற உள்ளார்.

- Advertisement -

dhoni

ஆனால் ஐபிஎல்லில் கண்டிப்பாக அவர் விளையாடுவார் என்பதால் அதில் அவர் அபாரமாக விளையாடும் பட்சத்தில் டி20 உலகக் கோப்பைக்கான அணியில் இடம்பெற அவரும் ஒரு போட்டியாளராக இருப்பார். ஆனால் அவர் தன்னை அணியில் திணித்துக் கொள்ள விரும்பவில்லை என்றும் ரவி சாஸ்திரி கூறியது குறிப்பிடத்தக்கது. ரவி சாஸ்திரியின் இந்த அறிக்கையில் இருந்து தோனி இன்னும் சிலமாதங்களே விளையாடுவார் என்று தெரிகிறது.