டி20 உலகக்கோப்பையில் சேர்த்தாலும் தோனி இதற்கு சரிவருவாரா ? என்பது தெரியவில்லை – ரவி சாஸ்திரி குசும்பான பேட்டி

Ravi
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி வீரரும், முன்னாள் கேப்டனுமான தோனி உலக கோப்பை தொடருக்குப் பின் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் உள்ளார். மேலும் கடந்த சில தொடர்களாகவே இந்திய அணியில் தோனியின் வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது இதனால் கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வினை அறிவிப்பார் என்று பலதரப்பில் இருந்தும் செய்திகள் வெளியாகிய நிலையில் இதுவரை தனது ஓய்வு குறித்து தோனி எந்த ஒரு அதிகாரபூர்வமான அறிவிப்பையும் வெளியிடவில்லை.

Dhoni

- Advertisement -

இந்நிலையில் அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் உலக கோப்பை டி20 போட்டியில் தோனி விளையாடுவது குறித்து ரவிசாஸ்திரி தற்போது சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அதில் ரவிசாஸ்திரி குறிப்பிட்டதாவது : தோனி கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சிறிது இடைவெளிவிட்டு விவேகமானது.

அவர் மீண்டும் ஐபிஎல் போட்டிகளில் விளையாட தொடங்கும் காலத்தை நான் விரும்பி எதிர்பார்க்கிறேன். அவர் ஒரு நாள் போட்டிகளில் மட்டும் அதிக அக்கறை கொண்டவர் என்று நான் நினைக்கவில்லை. அவர் டி20 போட்டி மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறந்த வீரர். பல்வேறு சூழ்நிலைகளிலும் அவரது முடிவுகள் மற்றும் ஆட்டம் இந்திய அணிக்கு கைகொடுத்திருக்கிறது.

Ravi-Shastri

டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு கொடுத்துவிட்டு போனதே டி20 விளையாட வேண்டும் என்ற ஒரு ஆசை தான். அவர் அதற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட ஒரு திறமையை வளர்த்துக் கொண்டார். ஆனால் அவரது உடல் இப்போது டி20 போட்டிகளில் இளம் வீரர்களை போன்று சமாளிக்குமா என்பதை அவர் மட்டுமே பதில் அளிக்கமுடியும் என்று ரவிசாஸ்திரி குறிப்பிட்டுள்ளார்.

dhonistand

ஆனால் ரவி சாஸ்திரியின் இந்த கருத்தினை கண்ட ரசிகர்கள் தோனி ரவி சாஸ்திரி குறிப்பிட்டதுபோல கிடையாது.தோனியின் உடல் எந்த ஒரு கிரிக்கெட் வடிவத்திற்கும் ஒத்துழைக்கும். ஏனெனில் இந்திய அணியில் உள்ள பலருக்கும் தோனி எவ்வளவு பிட்டான வீரர் என்று தெரியும். இப்பொழுதுகூட தோனியின் ஓட்டத்தை யாராலும் ஈடு கொடுக்க முடியுமா என்பது சந்தேகம்தான் என்ற அளவிற்கு தோனி நல்ல உடல் தகுதியுடன் உள்ளார் என்று பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement