நீங்க சொல்ற மாதிரியெல்லாம் இல்லை. கொரோனா வர காரணம் என்ன ? – ரவி சாஸ்திரி விளக்கம்

Shastri

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தற்போது இங்கிலாந்து அணிக்கெதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரில் அந்நாட்டில் விளையாடியது. இந்த தொடரில் முதல் நான்கு போட்டிகள் எந்தவித இடையூறுமின்றி சிறப்பாக நடைபெற்று முடிய இந்திய அணியானது 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இந்நிலையில் 5வது போட்டியில் துவங்கும் முன்னர் இந்த போட்டி கொரோனா அச்சம் காரணமாக ரத்து செய்யப்பட்டது.

indvseng

இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் இதர பயிற்சியாளர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாக 5வது போட்டி நடைபெறாமல் ரத்து செய்யப்பட்டது. மேலும் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கொரோனாவால் பாதிப்படைய காரணம் பயோ பபுளை மீறி ஹோட்டலில் வரவேற்பு அறையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டதுதான் என்று தகவல்கள் பரவின.

- Advertisement -

மேலும் அனுமதியின்றி இது போன்ற பொது நிகழ்ச்சிகளுக்கு அவர்கள் சென்றிருக்கக் கூடாது என்றும் விமர்சனங்களும் எழுந்துள்ளன. இந்நிலையில் தற்போது ரவிசாஸ்திரி தான் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தது குறித்து தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

Bharath Arun

இந்த தொடர் ஆரம்பமானது முதல் எது வேண்டுமானாலும் நிகழ்ந்திருக்கலாம். ஏனெனில் இந்த ஒட்டுமொத்த இங்கிலாந்து தொடரிலும் நாங்கள் கொரோனா கட்டுப்பாடுகள் ஏதும் இன்றி இயல்பாக தான் இருந்தோம். பயோ பபுள் கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் இந்த தொடர் சிறப்பாக நடைபெற்றது.

- Advertisement -

Shastri

இந்நிலையில் இந்த தொற்று எவ்வாறு ஏற்பட்டது ? என்று எந்த ஒரு இடத்திலும் கண்டறிய முடியாது என்று ரவிசாஸ்திரி விளக்கம் அளித்துள்ளார். இருப்பினும் பயோ பபுளை மீறி அவர் வெளியே சென்றது தவறு என்றும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்து இருந்தால் இந்த கடைசி போட்டி நடந்திருக்கும் என்றும் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement