பும்ராவின் இந்த விடயத்தில் நாங்கள் எச்சரிக்கையாக இருக்கிறோம் – ரவி சாஸ்திரி பேட்டி

Ravi

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதலாவது போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் மூலம் இந்திய அணி 1- 0 என்ற கணக்கில் இந்த தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் நாளை இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புனே மைதானத்தில் நடைபெற உள்ளது.

Bumrah

இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா குறித்து பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : தற்போது பும்ரா காயத்தின் காரணமாக டெஸ்ட் அணியில் இருந்து விலகியுள்ளார். அவருடைய காயம் எந்த அளவுக்கு தீவிரமாக இருக்கிறது என்பதைப் பொறுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்படும்.

தற்போது தேசிய கிரிக்கெட் அகடமியில் மருத்துவ குழுவின் கண்காணிப்பில் இருக்கிறார். அவர் விரைவில் அறுவை சிகிச்சைக்காக வெளிநாடு செல்வார் இந்நிலையில் அவருக்கு தொடர்ந்து போட்டிகளை நான் கொடுக்க விரும்பவில்லை. ஏனெனில் அவருக்கு அதிக பணிச்சுமை கொடுத்தால் அவருக்கு காயம் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.

Bumrah

எனவே அவருக்கு தேவையான அளவு ஓய்வினை கொடுத்த பிறகு அவரை அணியில் தேர்வு செய்ய வேண்டும். ஏனெனில் அவர் உலகத்தரம் வாய்ந்த உலகின் நம்பர் ஒன் பந்துவீச்சாளர் நாங்கள் அவரை இழக்க தயாராக இல்லை என்றும் அவருக்கு ஓய்வு கொடுத்து அவர் அணிக்கு பலமாகத் திரும்பி வருவதை எதிர் பார்க்கிறோம் என்று ரவி சாஸ்திரி கூறியது குறிப்பிடத்தக்கது.