அந்த தமிழக வீரரும் ரெடி, உலக கோப்பையில் தேர்வாக அந்த 3 இளம் வீரர்கள் தயாரா இருக்காங்க – ரவி சாஸ்திரி பேட்டி

Shastri
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவாக கோடைகாலத்தில் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் கோப்பை வெல்வதற்காக களமிறங்கியுள்ள 10 அணிகளுக்காக விளையாடும் நிறைய இளம் இந்திய வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் தங்களது நாட்டுக்காக விளையாடும் எண்ணத்துடனும் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக ஐபிஎல் தொடரில் கடந்த 15 வருடங்களில் ஹர்திக் பாண்டியா, பும்ரா உட்பட நிறைய இளம் வீரர்கள் கிடைத்தது போல் இந்த வருடமும் சில தரமான வீரர்கள் கிடைத்துள்ளனர்.

Yashasvi Jaiswal 2

- Advertisement -

அதில் ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரராக மிரட்டும் ஜெய்ஸ்வால் முதலாவதாக அனைவரது பாராட்டுகளை பெற்று வருகிறார். உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு ஏற்கனவே 2020 அண்டர்-19 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரராக சாதனை படைத்து இந்தியா ஃபைனல் வரை செல்வதற்கு முக்கிய பங்காற்றிய அவர் இந்த சீசனில் வரலாற்றின் 1000வது ஐபிஎல் போட்டியில் தனி ஒருவனாக 124 (62) ரன்கள் விளாசி கொல்கத்தாவுக்கு எதிராக அதிவேகமாக அரை சதமடித்த (13 பந்துகள்) வீரராக சாதனை சாதனையும் படைத்தார்.

சாஸ்திரி பாராட்டு:
அதே போலவே கொல்கத்தா அணியில் குஜராத்துக்கு எதிராக கடைசி ஓவரில் 5 சிக்சர்களை அடித்து அசாத்தியமான வெற்றியை பெற்றுக் கொடுத்த ரிங்கு சிங் சேசிங் செய்யும் போட்டிகளில் மிகச் சிறப்பாக செயல்பட்டு லேட்டஸ்ட் பினிஷராக உருவெடுத்துள்ளார். இவர்களுடன் மும்பை அணியில் திலக் வர்மா, பஞ்சாப் அணியில் ஜிதேஷ் சர்மா, குஜராத் அணியில் சாய் சுதர்சன் போன்றவர்கள் இந்தியாவுக்காக வரும் காலங்களில் விளையாடும் அளவுக்கு இந்த சீசனில் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், சாய் சுதர்சன், திலக் வர்மா போன்ற வீரர்கள் ருதுராஜ் கைக்வாட் போன்ற ஏற்கனவே வாய்ப்பு பெற்ற இளம் வீரர்களுடன் 2023 உலக கோப்பையில் இந்தியாவுக்காக விளையாடும் அளவுக்கு போட்டி போட்டு வருவதாக முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பாராட்டியுள்ளார். அதில் நல்ல முன்னேற்றத்தை கண்டாலும் சற்று பொறுமையாக விளையாடும் தமிழக வீரர் சாய் சுதர்சனுக்கு பதில் அதிரடியாக விளையாடும் திலக் வர்மா பொருந்துவார் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி ஐசிசி இணையத்தில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அது போன்ற வீரர்களில் ஜெய்ஸ்வால் முதலாவதாக இருப்பார். ஏனெனில் என்னைப் பொறுத்த வரை கடந்த சீசனில் இருந்ததற்கு இந்த சீசனில் அவர் விளையாடும் விதம் பெரிய முன்னேற்றத்தை காட்டுவது நல்ல அறிகுறியாகும். அது அந்த இளம் வீரர் தனது விளையாட்டுக்காக அக்கறையுடன் முன்கூட்டியே தயாராகியுள்ளார் என்பதை காட்டுகிறது. குறிப்பாக தன்னுடைய ஷாட்களில் அவர் முன்பை விட அதிக பவரை காட்டுகிறார். கடந்த வருடத்தை விட தற்போது அவர் மைதானத்தின் அனைத்து திசைகளிலும் அடிப்பது நல்லதாகும்”

Tilak Varma

“அந்த இடத்துக்கு வரும் மற்றொரு வீரர் பெரிய கதையைக் கொண்ட ரிங்கு சிங். நான் அதிகம் பார்த்ததில் அவரிடம் அற்புதமான பொறுமை இருக்கிறது. இந்த இருவருமே ஏழையாக அடிமட்டத்திலிருந்து வந்தவர்கள். குறிப்பாக தங்களது வாழ்வின் ஆரம்ப காலங்களில் கடினமாக உழைத்த அவர்களுக்கு எதுவுமே எளிதாக கிடைக்கவில்லை. அதனாலேயே அவர்களுடைய ஆட்டத்தில் பசியும் வெறியும் இருக்கிறது. அதை நாம் டாப் அளவில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்”

- Advertisement -

“அதே போல இடது கை வீரராக சாய் சுதர்சனும் நமது கண்முன்னே அசத்துகிறார். இருப்பினும் நான் திலக் வர்மா, ஜெய்ஸ்வால், ரிங்கு சிங் ஆகியோரை தேர்ந்தெடுப்பேன். அவர்கள் ருதுராஜ் போன்ற சமீபத்தில் நீண்ட காலங்களாக இருந்து வரும் இளம் வீரர்களுடன் போட்டியிடுவதற்கு தகுதியானவர்கள். இந்த வீரர்கள் இந்தியாவுக்காக தங்களது தேர்வை நெருங்கி வருகிறார்கள்”

Shastri

இதையும் படிங்க:IPL 2023 : அப்டி என்ன பண்ணிட்டாரு? அவருக்கு ஒரு ரூபாய் கூட சம்பளம் கொடுக்காதீங்க – இங்கிலாந்து வீரரை விளாசிய கவாஸ்கர்

“அதில் உலக கோப்பை நெருங்கும் போது நல்ல ஃபார்மில் இருப்பவர்கள் வாய்ப்பு பெறலாம். ஒருவேளை முக்கிய வீரர்களையும் பாதிக்கும் காயங்கள் இல்லாமல் இருந்தால் இவர்கள் உலகக்கோப்பை அணியில் கலவையாக இருப்பார்கள்” என்று கூறினார்.

Advertisement