ஆனந்தக் கண்ணீர் விட்ட ரவி சாஸ்திரி.. விமர்சித்த கவாஸ்கரை எழுந்து நின்று பாராட்ட வைத்த நிதிஷ் ரெட்டி

Nitsh Reddy 3
- Advertisement -

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 474 ரன்கள் குவித்தது. அடுத்ததாக விளையாடிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஏமாற்றத்தை கொடுத்தார்கள். அதனால் 221-7 என இந்தியா தடுமாறியதால் ரசிகர்கள் கவலையில் ஆழந்தனர்.

ஆனால் அப்போது ஜோடி சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் – நிதிஷ் ரெட்டி ஆகியோர் 127 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை ஃபாலோ ஆன் பெறும் அவமானத்திலிருந்து காப்பாற்றினார்கள். அதில் வாஷிங்டன் சுந்தர் 50 ரன்களில் அவுட்டானார். மறுபுறம் தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு சவாலை கொடுத்த நிதிஷ் ரெட்டி சதத்தை அடித்து அசத்தினார்.

- Advertisement -

சாஸ்திரி பாராட்டு:

அதை மைதானத்திலிருந்து நேராக பார்த்த அவருடைய தந்தை ஆனந்த கண்ணீர் விட்டது இந்திய ரசிகர்களை நிகழ்ச்சி அடைய வைத்தது. அந்த தருணத்தை நேரலையில் பார்த்த முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தம்மை கட்டுப்படுத்த முடியாமல் ஆனந்தக் கண்ணீர் விட்டார். அப்படியே தனது காந்த குரலால் அந்த தருணத்தை சாஸ்திரி வர்ணித்தது பின்வருமாறு.

“இந்த சதம் உங்களுடைய கண்களில் தண்ணீரை வர வைக்கும். நித்திஷ் ரெட்டியின் அப்பா மட்டும் இப்போது அழுகிறார் என்று நான் நினைக்கவில்லை. ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் தங்களுடைய கண்களில் கண்ணீரை வைத்திருப்பார்கள்” என்று கூறினார். அதே போல மற்றொரு முன்னாள் ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் எழுந்து நின்று நித்திஷ் ரெட்டியை பாராட்டினார்.

- Advertisement -

கவாஸ்கர் பாராட்டு:

அப்படியே அவரும் ஏபிசி ஸ்போர்ட் நேரலையில் வர்ணித்தது பின்வருமாறு. “இது அற்புதமான ஷாட். நேரான பேட்டில் தூக்கி அடித்து அவர் தன்னுடைய முதல் சதத்தை தொட்டுள்ளார். இது அவருடைய பல சதங்களில் முதல் சதம் என்று நான் உறுதியாக சொல்வேன். இந்திய கிரிக்கெட்டுக்கு இவர் என்ன ஒரு நல்ல கண்டுபிடிப்பு. சூப்பர் இன்னிங்ஸ் அற்புதமான பொறுமை”

இதையும் படிங்க: சொன்னதை செஞ்சுட்டாரு.. பேட்டி எடுத்த ஜாம்பவான் கில்கிறிஸ்ட்.. பாச மழையில் நனைந்த நிதிஷ்.. வேற என்ன வேணும்

“இது திறமை மற்றும் பொறுமையின் அற்புதமான கலவை. சிறப்பான ஆட்டம் இளம் பையனே. தொடர்ந்து செல்” என்று கூறினார். இத்தனைக்கும் இந்த தொடரின் முதல் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட போது உள்ளூரில் பெரியளவில் விளையாடாத நித்திஷ் ரெட்டி டெஸ்ட் கிரிக்கெட்டில் அதுவும் ஆஸ்திரேலியாவில் விளையாட சரியானவரா? என்று கவாஸ்கர் விமர்சித்தார். ஆனால் அவரையே தனது திறமையால் நிதிஷ் எழுந்து நின்று பாராட்ட வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement